Thursday, 29 January 2026

வேதத்தில் எழுதப்பட்டுள்ள உவமைகளும் அவற்றின் பொருளும்(FIGURATIVE MEANINGS)

வேதத்தில் நீங்கள் வாசிக்கும் ஒவ்வொரு தீர்க்கதரிசன வார்த்தைக்கான பொருள் வேதத்தில் மறைபொருளாக குறித்த காலம் நிறைவேறும் வரை மறைந்திருந்தது. அந்த குறித்த காலம் நிறைவேறாததால் வேதத்தை நாம் எத்தனை முறை வாசித்தாலும், மறைபொருள்களை முழுமையாக அறிந்து கொள்ள முடியவில்லை. தேவன் அதை வெளிப்படுத்தாமல் யார் எத்தனை உரைகள்(Commentaries) எழுதினாலும் அது மனித யூகங்களும் கற்பனைகளுமே! அவைகளை எந்த வேதாகம கல்லூரியிலும் கற்க முடியாது.

காரணம் அங்கே வேதத்தின் நான்கு பகுதிகளில் வரலாறு(HISTORY), அறிவுறுத்தல்கள்(INSTRUCTIONS) ஆகிய இரண்டை மட்டுமே விரிவாகப் படிக்க இயலும். ஆனால் தீர்க்கதரிசனங்களையும் அவற்றின் நிறைவேறுதல்களையும் அல்ல! அதிலும் குறிப்பாக பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்கள் அங்கே விரிவாகக் கற்றுத்தரப்படும் ஏனெனில் அது நிறைவேறி விட்டதுமல்லாமல் இயேசுகிறிஸ்துவால் வெளிப்படுத்தப்பட்டும் விட்டது. ஆனால் புதிய ஏற்பாட்டின் தீர்க்கதரிசனங்கள், அதன் நிறைவேறுத்தல்கள்? அது தேவனின் வலக்கரதில் ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப்பட்டிருந்தது.

குறித்த காலமான இந்த வெளிப்படுத்தலின் நிறைவேற்ற காலத்தில் எல்லாம் நிறைவேறி இருப்பதால், அவை நிறைவேறிய இடத்தில் அவைகளை நேரடியாக கண்டும், கேட்டும் (வெளி 22:8) உலக கிறிஸ்துவர்களுக்கு சாட்சியிடவும் (வெளி 22:16) இயேசு கிறிஸ்துவால் நேரடியாகப் பணிக்கப்பட்ட தூதன் தான் புதிய யோவான் (வெளி 1:1,2, 3:12) 

இவர், வெளிப்படுத்தல் நான்காம் அதிகாரம் நிறைவேறிய போது இனிமேல் சம்பவிக்க வேண்டியவைகளை இயேசுவால் காண்பிக்கப்பட ஆவிக்குள்ளாகி, பரலோகம் அழைக்கப்பட்டு, பரலோகத்தின் அமைப்பைப் போல் பூமியிலும் தேவனுக்கு  ஆசாரிப்பு கூடாரம் எழுப்ப மோசேக்கு மலையில் மாதிரி  காண்பிக்கப் பட்டதுபோல், (யாத் 25:40) இப்பூமியில் இறங்கிவர இருக்கும் 'பரிசுத்த நகரம்'(புதிய எருசலேம்) (வெளி 21:2) பரலோகத்தில் அதன் அமைப்பைப் போலவே பூமியிலும் தேவ இராஜ்ஜியம் கட்டப்பட கட்டளை பெற்று பரலோகம் கொண்டு செல்லப்பட்டவர்.

ஐந்தாம் அதிகாரம் நிறைவேற்ற காலத்தில், உள்ளும் புறம்பும் எழுதப்பட்டு, ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப்பட்டிருந்த ஒரு புஸ்தகத்தைச் சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிற தேவனுடைய வலது கரத்திலே கண்டவர். பின், வானத்திலாவது, பூமியிலாவது, பூமியின்கீழாவது, ஒருவனும் அந்தப் புஸ்தகத்தைத் திறக்கவும், அதைப் பார்க்கவும் கூடாதிருந்ததால்,மனுக்குலத்திற்கு இரட்ச்சிப்பு இல்லையென அறிந்து மிகவும் அழுதவர்.

பத்தாம் அதிகாரத்தில் செம்மறியானவரால் எல்லா முத்திரைகளும்  உடைக்கப்பட்ட பின் அதை வான தூதனிடம் வாங்கிப் புசித்து தீர்க்க தரிசனம் சொல்லப் பணிக்கப்பட்டு, கீழ்படிந்து அதைப் பெற்று புசித்ததால் வேதத்தை முழுமையாக புரிந்து கொண்டு சாட்சி கொடுத்துக் கொண்டிருப்பவர்.

பனிரெண்டாம் அதிகாரத்தில், காணப்படும் சூரியனை அணிந்திருந்த ஸ்திரி TT,(இந்த விழுந்துபோன ஏழு நட்சத்திரங்கள் நடத்திய சபையில்(வெளி 1:20) கல்வியறிவு அதிகம் இல்லாத சாதாரண உறுப்பிணராக இருந்தவர் புதிய யோவான்) மற்றும் ஏழு தலைகள் பத்து கொம்புகளையும் அவற்றில் ஏழு முடிகளையும் உடைய சிவப்பான பெரிய வலுசர்பம்(வெளி 17:5-7), இவைகளின் நிறைவேறுதல் யார் என்பதையும் இவருக்கு இயேசுவே பெரிய பிரகாசமான நட்சத்திரமாக மூன்று நாட்கள் மாலை வேளை ஜெபத்தின் போது பிரத்தியட்சமாக தோன்றி இவைகளை வெளிப்படுத்தியுள்ளார்.

 அவர் வெளிப்படுத்தியதையே நான்  ஏற்கெனவே பட்டியலிட்டிருந்தேன். அவைகளே விதை, நிலம், மரம், பறவை, உணவு, புளிதமாவு, பாத்திரம்,தராசு, இருப்புக்கோல் (தடி), நெருப்பு, தூபகலசம், பானை, வெளிச்சம், குத்துவிளக்கு, குருடன், செவிடன், திருமண உடை, பொக்கிஷம், செல்வந்தர், நீர், நீரூற்று, ஆறு, கடல், மீனவர், வலை, மீன், கப்பல், மிருகம், தலை, கொம்பு, வால், செம்மறியானவரின் உடல் மற்றும் இரத்தம், புதிய மற்றும் பழைய திராட்ச்சை ரசம், புதிய மற்றும் பழைய சித்தை (துருத்தி), ஒலிவ எண்ணை, மலை, முத்திரை, எக்காளம், பாடல், கல், உருவம், நான்கு உருவங்கள் (சிங்கம், கழுகு, காளை, மனிதன்), காற்று, இறப்பு, கல்லறை, உயிர் மூச்சு, உயிர் பெறல், மணமகன், மணமகள், விதவை, பெற்றோரில்லாத பிள்ளை, போர், எருசலேம், பாபிலோன், வானம், பூமி, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், சாவி என்பன.

இவையெல்லாம் உவமைகளாக வேதத்தில் கையாளப்பட்டு சாத்தானுக்கு இரகசியமான மறைபொருளாக வைக்கப்பட்டு உள்ளன. இவைகளுக்கு சரியான அர்த்தத்தை தேவனே வெளிப்படுத்தாமல், எத்தனை முறை நாம் வேதத்தை வாசித்தாலும் நம்மால் அதை முழுமையாக அறிய முடியாது.

 இயேசுவின் சீஷர்கள் அவரிடத்தில் வந்து: ஏன் அவர்களோடே உவமைகளாகப் பேசுகிறீர் என்று கேட்டார்கள். (மத் 13:10) அதற்கு பதிலாக இயேசு பதினோராம் வசனத்தில், 'பரலோகராஜ்யத்தின் இரகசியங்களை அறிந்து கொள்ள உங்களுக்கு (இயேசுவின் சீடர்களுக்கு) அருளப்பட்டு உள்ளது, அவர்களுக்கோ (யூதர்களுக்கு) அருளப்படவில்லை' என்று கூறினார். 

அதுபோலவே இயேசுவின் இராஜ்ஜியத்தை சேர்ந்த TTT(பன்னிரு கோத்திரத்தாருக்கு) இந்த பரலோக இரகசியம் அருளப்பட்டுள்ளது. இயேசுவே அதை இந்த தூதருக்கு வெளிப்படுத்தி அனுப்பியதால் இப்பொழுது அதை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அவற்றை ஒவ்வொன்றாக நான் இனி எழுதி வேதத்தில் அது எங்கெல்லாம் வேத வசனத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் எடுத்துக்காட்டுகிறேன்.

I. விதை, நிலம், மரம், பறவை

1. விதை(வித்து) = வார்த்தை.  அது இரண்டு வகைப்படும் (எரே 31:27),(மத் 13:24). ஒன்று தேவனின் வார்த்தை  (நல்லவிதை) உண்மையானது (லூக் 8:11). அது நம்மை கடவுளின் பிள்ளைகள் ஆக்குகிறது. மற்றொன்று சாத்தானின் வார்த்தை (கெட்ட விதை) பொய்கள் (யோவா 8:44). அது நம்மை சாத்தானின்(சந்ததி) பிள்ளைகளாக்குகிறது. Other references:  1 Peter 1:22-23, John 3:3-5 Mark 4:13-14 Jeremiah 31:27 Psalm 126:5-6 James 1:8 Matthew 13:24-30   1 John 3:9 Acts 17:29 John 10:35.

2. நிலம் = மனித இருதயம், உலகம் (சபை) (மத் 13:38). நிலங்கள் நான்கு வகைப்படும். அவை ஒன்று வழியருகாமையில் உள்ள நிலம் (மத் 13:4) - அங்கு விழுந்த விதை மண்ணில் ஊன்றப்படாமல் மறையாதததால் பறவை வந்து பட்சித்துவிடுவது போல் தேவனின் வார்த்தையைக் கேட்டு உள்ளத்தில் அதை ஊன்றாததால் உடனே சாத்தான் உள்ளத்திலிருந்து வார்த்தையை எளிதில் எடுத்துப் போட்டுவிடுவதால்  தேவ ஆவியில்லாத வெற்று மனிதராய் வாழ்வர்.

 இரண்டு கடும் பாறையான அதிக மண்ணில்லாத பக்குவப்படாத நிலம் (மத் 13:5) - அங்கு விழுந்த விதை சீக்கிரமாய் முளைத்தாலும் செடி வேர்விட மண்ணில்லாததால் சூரியனின் வெப்பத்தை தாங்க முடியாமல் தீய்ந்துபோய் கருகி உலர்ந்துவிடுவது போல், இவர்கள் வார்த்தையை முதலில் ஆர்வமாகக் கேட்டு ஏற்றுக்கொண்டாலும் சூரிய வெப்பம் போன்ற இடறல்கள், ஆன்மீக சோதனைகள் போன்ற கடினமான சூழ்நிலையில் சோர்ந்துபோய் விடுவதால் வார்த்தையில் நிலைத்திருக்க முடியாமல் ஆவியில் இறந்துபோய் உடலளவில் மட்டுமே வாழ்வதால் பலனில்லை.

பாறை = பன்படுத்தப்படாத கடின இருதயம், அவர்களைக் கொண்ட சபை.

மூன்றாவது முட்செடிகள் அதிகம் வளர்ந்துள்ள புதர்கள் நிறைந்த நிலம் (மத் 13:7) - அங்கு விழுந்த விதை முளைத்து வளர்ந்த செடி ஏற்கெனவே அங்கு முட்கள் இருப்பதாலும், அவை வேகமாக வளர்வதாலும், அவற்றால்  நெருக்கப்படுவதாலும், செடி உயிருடன் இருந்தாலும் அது பலனளிக்க முடியாமல் போவதுபோல் இவர்கள் வார்த்தையைக் கேட்டு ஏற்றுக்கொண்டாலும் வார்த்தையில் வளர்ந்தாலும், ஆவியில் உயிரோடிருந்தாலும், முட்கள் போன்ற உலகக் கவலைகளாலும், ஆன்மீக மயக்கத்தினாலும் நெருக்கப்பட்டு பலன்கொடுக்க முடியாமல் வெற்று வாழ்க்கை வாழ்கிறார்கள். இவர்கள் காற்றினால் அடித்து செல்லப்படும் பதருக்கு ஒப்பானவர்கள்.

நான்காவது  பக்குவப்பட்ட நல்ல நிலம் (மத் 13:8)  - இங்கு விழுந்த விதை முளைத்து செடியாக வளர்ந்து சூரியன் போன்ற இடறல்கள், ஆன்மீக சோதனைகள் இவற்றை தாங்கி உரங்கொண்டு மேலும் வளர்ந்து தங்கள் தகுதிக்கேற்ப நூறு, அறுபது, நுப்பது மடங்காக பலன் தந்து, தன்னைப் போன்ற பலன் கொடுக்கும் விதைகளை உருவாக்குவதுபோல் 

இவர்கள் இடறல்கள், உலகக்கவலைகள், ஆன்மீக சோதனைகள், மயக்கங்கள் இவற்றையெல்லாம் தாண்டி அவற்றை மேற்கொண்டு வார்த்தையில் இறுதிவரை நிலைத்திருந்து, வார்த்தையை விதைத்து ’மீண்டும் வருவேன்’ என்று வாக்களித்துச் சென்றுள்ள இயேசுவின் எதிர்பார்ப்பின்படி,  நூறு, அறுபது, முப்பது மடங்கு பலனாக, தன்னைப் போன்றே வார்த்தையைப் பெற்று அதினால் பலன்தரும் மனிதர்களை(Firstfruits) தேவனின் இராஜ்ஜியத்திற்கு கொண்டுவருவர்.  Other references: 1 Corinthians 3:9 Luke 8:15 Mark 4:14-20 Hebrews 6:7-8 Matthew 13:23.

3. மரம், திராட்ச்சைச் செடி  = தேவனின் வித்தால் மீண்டும் பிறந்த உள்ளார்ந்த மனிதன்.(யோவா 15:1-5). மரங்கள் இரண்டு வகைப்படும். ஒன்று வாழ்வின் மரம் (ஜீவ விருட்சம்) = உண்மையான போதகர். உதாரணம் இயேசு.(ஏசா 5:7), (யோவா 15:1). மற்றொன்று நன்மை தீமை அறியத்தக்க விருட்சம் = பொய் போதகர் (கள்ள தீர்த்கதரிசி) (யோவா 6:63,14:6), தானி 4:20-22).

கிளைகள் = அப்போஸ்தலர்கள். (யோவா 15:1).
இலைகள் = நற்செய்தியாளர் ( எசே 47:12).
கனிகள் = வார்த்தை ( நீதி 13:2), செயல்கள் (கலா 5:22-23), வார்த்தையால் பிறந்த விசுவாசி (யாக் 1:18).
Other references: Isaiah 5:7 • Matthew 7:15-20 Daniel 4:20-22 Genesis 2:9 Revelation 22:1-2 • Isaiah 55:12 Genesis 3:22 Isaiah 61:3 Jeremiah 5:14 Genesis 2:17 John 14:6 Deuteronomy 32:32-33 Revelation 2:7.

3. பறவை = ஆவி. (மத் 3:16). பறவைகள் இரண்டு வகைப்படும். ஒன்று கடவுளின் பறவை (தூய ஆவி, தேவ ஆவி) (மத் 3:16)  எ.கா புறா. மற்றொன்று சாத்தானின் பறவை (அசுத்த ஆவி,கெட்ட ஆவி) அசுத்தமும் அருவருப்புமுள்ள சகலவித பறவைகள் (வெளி 18:2). Other references: Revelation 19:17 Revelation 18:2 Luke 8:5, 12 Matthew 13:32 John 1:32 Daniel 4:21 Matthew 13:4, 19 Mark 4:4 ,15.

II. உணவு, புளிதமாவு 

1உணவு (போஜனம்) = வாழ்வு (உயிர்) தரும் உண்மையான தேவவார்த்தை. (மத் 24: 45-47). உணவுகள் இரண்டு வகைப்படும். ஒன்று கடவுள் தரும் உணவு. (தேவ வார்த்தை) அதனால் மனிதனின் ஆவியும் ஆன்மாவும் உயிர் பெறும். விளைவு நித்திய வாழ்வு, பரலோகம் (மோட்சம்). (மத் 4:4), (யோபு 34:3-4), (எரே 15:16), (ஏசா 55:1-3), (2 கொரி 4:16).

மற்றொன்று சாத்தானின் உணவு (கெட்ட உணவு) பொய்ப் போதனைகள், சத்தியமில்லை, தப்பறைகள், உண்மையோடு பொய் கலந்தது, மனித போதனைகள். அதனால் மனிதனின் ஆவியும் ஆன்மாவும் சாகும். விளைவு பாதாளம், நித்திய நரகம். (ஆதி 2:17), (உபா 32:32-33), (ஏசா 28:7-8), (நீதி 4:17). Other references: Deuteronomy 8:3 Matthew 24:7 Matthew 6:11 John 6:27 John 6:33 Amos 8:11 Revelation 18:3 Revelation 10:9-10 John 6:48 1 Peter 2:2 Luke 22:14-20 Malachi 1:7-8 Matthew 26:26-29 Revelation 2:7, 17.

பஞ்சம் = வெளிப்படுத்தப்பட்ட வார்த்தை கிடைக்காத நிலை, இடம்.

உபவாசம் = ஆவியைக் கொல்லும் சாத்தானின் கள்ள போதனைகள், மனித போதனைகள், பாரம்பரியங்கள் (traditions),  பழக்க வழக்கங்கள், மூட நம்பிக்கைகள் இவற்றை கேட்காமல் இருக்கும் நிலை.

2. புளிதமாவு = ஒரு மனிதனின் ஆவியையும் விசுவாசத்தையும் மாற்றும் போதனைகள்.  (மத் 13:33). புளித்த மாவுகள் இரண்டு வகைப்படும். ஒன்று கடவுள் தரும் புளித்தமாவு = மனிதனின் விசுவாசத்தை வளர்க்கும், நம் ஆன்மா ஆவியில் வளர துணை புரியும் தேவனின், இயேசுவின் நல்ல போதனைகள்.

மற்றொன்று மனிதனின் விசுவசத்தை அழிக்கும், ஆவியைக் கொல்லும் சாத்தானின் கள்ள போதனைகள், மனித போதனைகள், பாரம்பரியங்கள் (traditions),  பழக்க வழக்கங்கள், மூட நம்பிக்கைகள்.(மத் 16:6-12). இங்கே இயேசு குறிப்பிடும் பெண் = போதகரைக் குறிக்கும். கலா 4:19ல் பவுலடிகளார் ஆணாயிருந்தாலும் நற்செய்தி போதனைக்காக ஒரு பெண்போல் ’கர்ப்பவேதனைப்படுகிறேன்' என்று கூறுவது உவமை. Other references: Luke 12:1 Exodus 12:20 Mark 7:1-8 Proverbs 19:27 1 Corinthians 5:6-8 Galatians 5:7-10 Ephesians 4:21-24.

III. பாத்திரம் (கிண்ணம், கலசம்), தராசு, இருப்புக்கோல் (தடி)

1.பாத்திரம் (கிண்ணம், கலசம்) = ஒரு மனிதனின் இதயம், சபை போன்ற நிறுவனம், குழு (வெளி15:7), (அப்போ 9:15), (எரே 48:11-12), (மத் 23:25-26). நாம் கடவுளுக்கேற்ற உன்னத, உகந்த பாத்திரமாக மாற வேண்டுமானால் தினமும் நம் இருதயத்தை வேத வார்த்தையைக் கொண்டு கழுவி சுத்திகரிக்க வேண்டும்.(யோவா 15:3, 2 திமோ 2:20-21). தேவனின் வார்த்தையால் நம் இதயத்தை நிறைக்கும் போது அதின் தீய குணங்கள் சிறிதுசிறிதாக வெளியேறி மாறிவிடும்.ஏற்கெனவே நம் உள்ளத்தில் பெற்று பதித்து வைத்துள்ள சாத்தனின் கலப்படமான வார்த்தை களைகளை வேரோடு பிடுங்கி வெளியேற்ற வேண்டுமானால் தேவனின் வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையைக் கேட்டு, நேசித்து வாசித்து, சுவாசித்து விசுவாசித்து நம் இதயத்தை நிறப்பி, அதனால் முத்திரையிடப்பட வேண்டும். 

மேலும் ( திராட்சரசம் சித்தை (துருத்தி) ஜாடி, கூடை) இவைகளும் இதையொத்ததவைகளே.(லூக் 5:37-39) Other references: Matthew 13:47-50 Romans 9:21-24 Isaiah 64:8 Timothy 2:20-21.

2. தராசு, அளவுகோல், அளவு நாடா = நமது விசுவாசத்தையும், செயல்களையும் சீர்தூக்கிப் பார்த்து அளவிடும் தேவனின் வேதவார்த்தை.(வெளி 6:5), (எஸ் 8:29), (யோபு 6:2), (சங்58:2), (நீதி 16:2), ( ஏசா 26:7), (சக 5:8). 

நீங்கள் ஒருவரையொருவவர் மாம்சத்துக்கேற்றபடி நியாயந் தீர்க்காதீர்கள்! (மத் 7:1), (லூக் 6:37) ஏனெனில் பரிசுத்த தேவன் இயேசுவே தமது முதல் வருகையில் நம்மை நியாயந்தீர்க்காமல் உலகத்தை இரட்சிக்கவே வந்தேன் என்றார். (யோவா12:47) தேவனின் வேதவார்த்தையே  நம்மை கடைசி நாளில் தீர்ப்பிடும் அளவுகோல்(யோவா12:48) 

Other references: 1 Samuel 2:3 Leviticus 19:36 Proverbs 24:12 Job 31:6 Psalm 62:9 Revelation 20:12 Daniel 5:25-30 Proverbs 11:1 Proverbs 20:10, 23 Micah 6:11 Hosea 12:7 John 12:48 Revelation 22:18-19.  

3. கோல் Rod (கைத்தடி, ஊன்றுகோல்) = வேத வார்த்தை, வேத வார்த்தையை கொண்டிருப்பவர் (பெற்றிருப்பவர்).   (வெளி 11:1-2), (சங் 23:4).இருப்புக்கோல் = ஆட்சிசெய்யும் (Ecclesiastical)அதிகாரம் பெற்றவர் , நியாயந்தீர்க்கும் அதிகாரம் (வெளி 2:26-27, 18: 1), (சங் 2:6-9, 89:32), (ஏசா 11:4), (எண் 17:2-11). Other references: Genesis 49:10 Hebrews 9:4 Revelation 21:15.

IV. நெருப்பு, தூபகலசம், பானை

1. நெருப்பு, அக்கினி = தீர்ப்பிடும், கபளீகரம் செய்யும்(எரித்து அழிக்க வல்ல), புடமிட்டு சுத்திகரிக்கும் வார்த்தை (லூக் 12:49).(எரே 5:14). நெருப்புகள் இரண்டு வகைப்படும். ஒன்று  நியாயந்தீர்ககும் கடவுளின் நெருப்பு (ஏசா 6:6-7, 42:25), (எரே 23:29), பாவத்தைச் சுட்டெரிக்கும் கடவுளின் நெருப்பு - ஞானஸ்நானம் (மல் 4:13). மற்றொன்று மனிதர்களின் ஆவியைக் கொல்லும் சாத்தானின் கோட்பாடுகள், மதக்கொள்கைகள் (லேவி 10:1-2), (வெளி 9:17, 13:13).   Other references:  Isaiah 31:9 Proverbs 16:27 Luke 24:32 2 Peter 3:7-12 Matthew 3:11-12

2. தூபகலசம் = மனிதனின் இருதயம் (வெளி 8:3-5). தூபவர்கம்(சாம்பிராணி) = ஜெப விண்ணப்பம், மன்றாட்டு (சங் 141:2), (வெளி 5:8). தூபப்புகை = ஜெபத்தின் சத்தம்.

 நம்முடைய ஜெப விண்ணப்பம் தேவனிடம் எழும்பி தேவனால் கேட்கப்பட வேண்டுமானால் மனித இருதயமான தூபகலசத்தில் தேவனுடைய வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையாகிய நெருப்பு வைக்கப்படவேண்டும். அதன் மீது நம் ஜெப விண்ணப்பமான தூபவர்க்கம் இடப்பட வேண்டும். அந்த ஜெபம், நெருப்பான வேத வார்த்தைக்கு உகந்ததாக, தேவனின் சித்தப்படி இருந்தால் மட்டுமே தேவனால் அங்கீகரிக்கப்படும். அந்நிய அக்கினியில் (லேவி 10:1-2) நம் மாம்ச சித்தப்படியான ஜெபங்களை எறெடுத்தால் தேவனின் கோபத்திற்கு ஆளாவோம். Other references: Hebrews 9:4, 9-10 Exodus 30:7-9 Leviticus 16:13 Proverbs 28:9 Proverbs 15:8, 29 Leviticus 10:1-2 Isaiah 1:15.

3. பானை = சபை போன்ற நிறுவனம், குழு (எரே 1:13). பானைகள் இரண்டு வகைப்படும். ஒன்று கடவுளின் பரிசுத்த பானை, 'இரட்ச்சிப்பின் பானை (சக 14:20-21) கர்த்தரின் சபை, ஆலயம். இரண்டாவது நம்பிக்கை துரோகம் மற்றும் அழிவின் பானை (எசே 24:3-6). அதில் சமைக்கப்படும் இறைச்சி = விசுவாசிகள். பானையின் தன்மையை (தூய அல்லது துரு அசுத்தம் உள்ளது) பொருத்தே விசுவாசிகள் அந்த சபையில் உருவாக்கப்படுவர். Other references: Ezekiel 11:1-4 Micah 3:1-3, 2 Kings 4:38-41.

V. வெளிச்சம், இருள், குத்துவிளக்கு, குருடர், செவிடர், திருமண உடை

1. (ஆன்மீக )வெளிச்சம் = வாழ்வளிக்கும் (யோவா 1:4),  முத்திரிக்கப்படாத (திறக்கப்பட்டுவிவரிக்கப்பட்ட) வெளிப்படுத்தப்பட்ட வார்த்தை (1 தெச 5:5), (லூக் 24:27). இதற்கு எதிரானது (ஆன்மீக) இருள் = அறியாமை, புரிதல் இல்லாத, உவமைகளால் மறைக்கப்பட்ட, முத்திரிக்கப்பட்ட, உலகத்தோற்றமுதல் தேவனால் வெளிப்படுத்தப்படாத வார்த்தை. (மத் 13:34-35).

1யோவா 1:5, யோவா 1:4-5 - தேவனே அந்த ஒளி, ஜீவனானவர் (சங் 84:11, 119:105). தேவனின் வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையை பெற்றவர்களே தேவனின் பிள்ளைகள். அதியாகமம் 1:3-5ல் தேவன் வெளிச்சத்தையும்(பகல்) இருளையும் (இரவு) வெவ்வேறாகப் பிரித்தார். ஒளி உண்டாகுமுன் பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது (ஆதி 1:2), (எரே4:23). Other references: Ephesians 5:8 John 1:9-13 Acts 26:18 Ephesians 4:18 Isaiah 5:20 John 3:18-21 Romans 13:11-14.

2. குத்துவிளக்கு (யாத் 25:31-40), (சக 4:2) = ஆவியோடு இணைந்து பணிபுரியும் ஊழியருக்கான அடையாளம் (வெளி 4:5, 5:6-7). ஒளியான இயேசுவின் வழியை ஆயத்தம் செய்த யோவான் ஸ்நானன் இதற்கு ஒரு உதாரணம் (யோவா 5:35). ஆனால் இறுதிவரை ஆவியில், விசுவாசத்தில் நிலைநிற்கவில்லை.

ஒலிவ எண்ணெய் (யாத் 27: 20-21) = தீர்க்கதரிசன நிறைவேறுதலை பெயரோடு வரையறுத்து சாட்சியளிக்கும் ஞானத்தின் அடையாளம்.

கண்கள் = ஆவிகள் (வெளி 5:6), தீர்க்கதரிசிகள் (ஏசா 29:10).  Other references:  Revelation 1:20 Hebrews 1:1-10 John 1:9-13 Revelation 2:5 Revelation 11:3-4 Zechariah 4:10 • Revelation 5:6 Revelation 18:23 Hebrews 8:5 Exodus 27:21.

3. குருடர் = வார்த்தையைப் பார்த்தும் அதன் பொருளை அறிந்துணராதவர். 
செவிடர் =  வார்த்தையைக் கேட்டும் அதன் பொருளை அறிந்துணராதவர். (வெளி 3:17), (ஏசா 43:8), (யோவா 9:39-41) காரணம் அது முத்திரிக்கப்பட்டு, உவமைகளால் மறைபொருளாய் வைக்கப்பட்டிருந்தது.(ஏசா 9:1-2, 29: 9-11, 13, 35:5-6), (மத் 15:14). இயேசு பரிசேயர்களை குறிக்க இவ்வார்த்தைகளை பயன்படுத்தினார்.
ஊமை = வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையைப் பெற்றிருந்தும் அதைப்பிறருடன் பகிர்ந்துகொள்ள இயலாதவர், இயலாத நிலை. துக்கவீட்டிலுள்ள குழந்தை வைத்திருக்கும் குழலைப்போல அதை இசைக்க முடியாத நிலை. நானும் அந்த நிலையில் இருப்பதால் எழுத்து மூலமாகவே என் இதயத்தை எழுதிக்காட்டுகிறேன்,
முடவன், சப்பானி = தேவனின் சித்தம் அறிந்தும் அதை செயல்படுத்த இயலாத நிலை.
Other references: Isaiah 42:18-20 Matthew 13:10-17 Psalm 119:130 Mark 4:10-12, 34 Ephesians 1:17-1.

4. திருமண வஸ்த்திரம் (உடை, ஆடை, துணி) =  உத்தம செயல்கள்(மத் 22:11-14), மனித இருதயம், உடல், நடக்கைகள், கோட்பாடுகள் இவற்றையும் குறிக்கும்.(வெளி 19:8, 13). ஆடைகள் இரண்டு வகைப்படும். ஒன்று கடவுளின் பரிசுத்த ஆடை. ரோமர் 13:14 ல் பவுல் இயேசுவையே ஆடையாக தரித்துக் கொள்ளுங்கள் என்கிறார்.
மற்றொன்று மனிதர்களின் ஆவியைக் கொல்லும் சாத்தானின் கோட்பாடுகள், மதக்கொள்கைகள் ஆகியவை சாத்தானின் ஆடையாகும். (வெளி 17:4,5). மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாயான அந்த ஸ்திரீ இரத்தாம்பரமும் சிவப்பான ஆடையுந்தரித்த்ருந்தாள். புதிய துணி = வெளிப்படுத்தப்பட்ட தேவ வார்த்தை (லூக் 5:36) பழைய துணி = வெளிப்படுத்தப்படாத தேவ வார்த்தை,மனித கற்பனை போதனைகள்.

வேசி = தேவனோடு திருமணம்(உடன்படிக்கை) செய்தபின்னும், அவருடன் உள்ள உறவை மீறி சாத்தானின் வித்தைப் பெற்று அவனுக்கு பிள்ளைகளைப் பெறும் பெண் போன்ற போதகர். 
Other references: Revelation 16:15 Revelation 19:7-8, 13 Exodus 28:2-5 Ephesians 6:11-17 Romans 13:12.

VI. பொக்கிஷம்,செல்வந்தர்
1.பொக்கிஷம், தங்கம், வெள்ளி, முத்து, நவரத்தினங்கள் = உண்மையான வார்த்தை (வெளி 3:17-18), (சங் 12:6), உண்மையான வார்த்தையைப் பெற்ற நபர் (புல 4:2), (1பேது 2:4-5). 
பொக்கிக்ஷங்கள் இரண்டு வகைப்படும். ஒன்று கடவுளின் பொக்கிஷம், (நீதி 25:11-12) மற்றொன்று சாத்தானின் பொக்கிஷம் = மதக்கோட்பாடுகள், பொய்கள் கலந்த வேத வார்த்தைகள், மனித போதனைகள் (வெனி 17 :4-5).

இயேசு, மத்தேயு 25:14-30 ல் பரலோகராஜ்ஜியம் பற்றி கூறிய உவமையில், வரும் புறத்தேசத்துக்குப் பிரயாணமாய்ப் போகிற ஒரு மனுஷன் தன் ஊழியக்காரரை அழைத்து, தன் ஆஸ்தியை அவர்கள் வசமாய் ஒப்புக்கொடுத்தானே அந்த வீட்டுத்தலைவர் - இயேசுஊழியக்காரர் - விசுவாசிகளாகிய நாம், தாலந்து - பெற்ற தேவ வார்த்தையின் அளவு, நாம் ஈட்டும் லாபம்(கனி, பலன்) - அந்த வார்த்தையைப் பகிர்ந்து நாம் சம்பாதிக்கும் ஆத்துமாக்கள்.

இயேசு, மத்தேயு 13:44-46 ல் பரலோகராஜ்யம்  நிலத்தில் புதைத்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது. என்று கூறிய உவமையில், நிலம் -இருதயம், பொக்கிஷம் - தேவ வார்த்தை. அதை ஒரு மனுஷன் கண்டு, மறைத்து, அதைப் பற்றிய சந்தோஷத்தினாலே போய், தனக்கு உண்டான (ஏற்கெனவே தன்னிடமிருந்த பழைய கலப்பட வார்த்தைகள்) எல்லாவற்றையும்  விற்று, அந்த நிலத்தை (உண்மையான வார்த்தை பெற்ற நபரை) சம்பாதித்துக் கொள்ளுகிறான். முத்தும் - தேவ வார்த்தை. சிந்திக்க!
இயேசுவை சந்தித்தபின் பவுலும் தான் கமாலியேலின் பாதத்தில் அமர்ந்து கற்ற பாடங்கள், வைராக்கியங்கள், குலப் பெருமைகள், ஏன்? ஏராளமான ஆஸ்திகள்  எல்லாவற்றையும் அவருக்காக 'நஷ்டமும், குப்பையும்' என்று உதறினார் (பிலிப்பியர் 3:8-11).
Other references: Proverbs 16:16 Deuteronomy 28:12 Revelation 18:12, 16-17 Isaiah 1:22 Jeremiah 6:30 Proverbs 3:14-15 Matthew 25:14-30 Matthew 13:44-46 Matthew 19:21 Luke 12:33-34 Revelation 21:18-21 Romans 11:33 Deuteronomy 26:18 Deuteronomy 33:13

2. செல்வந்தர் = வார்த்தை, கடவுளைப் பற்றிய அறிவு அதிகம் உள்ளதாக மிகுந்த பெருமைப்படும் நபர் (வெளி 3:17-18). இது இருவகையில் பொருள்படும். ஒன்று உலகப்பிரகாரமானது. மற்றொன்று ஆன்மீகப் பிரகாரமானது. முதலாவது, பணத்தாசை பற்றியது(1திமோ 6:10), (மத்5:24). இரண்டாவது, தேவ வார்த்தை பற்றியது.
இது இருவகைப் படும். ஒன்று கடவுளின் பொக்கிஷமான தேவ வார்த்தையில் அதிக செல்வந்தர். அது அவரை பரலோகம் சேர்க்கும். இரண்டாவது, சாத்தானின் வார்த்தையில் அதிக செல்வந்தர். அது அவரை நரகத்தில் தள்ளும்.
ஏழை x செல்வந்தர், = வார்த்தை, கடவுளைப் பற்றிய அறிவு அதிகம் இருந்தாலும் சிறிதும் பெருமை இல்லாத நபர், ஆவியில் எளிமையுள்ளவர்கள் (மத் 5:3)
Other references: Matthew 5:3 Romans 11:33 . Colossians 2:2-3 Proverbs 23:4, 23 Revelation 13:16 James 5:1-6 Revelation 18:3 Psalm 112:1-3 Proverbs 8:17-21 James 2:5.

VII. நீர், நீரூற்று, ஆறு
1. நீர், தண்ணீர் = வார்த்தை (ஏசா 55:1-3), (வெளி 22:17). தண்ணீர் இருவகைப்படும். ஒன்று கடவுளின் தண்ணீர், பரலோகத்திலிருந்து வரும் நீர் (உபா 32:), (ஏசா 40:6-8). இரண்டாவது, சாத்தானின் விஷம் கலந்த தண்ணீர் = பொய் கலந்த வார்த்தை (வெளி 8:10-11),(ஏசா 1:22, 5:1-7),  
Other references: Amos 8:11-12 Revelation 8:10-11 Isaiah 5:1-7 • Deuteronomy 32:2 Isaiah 55:1-3 Matthew 24:7 Isaiah 1:22 • Jeremiah 23:15-16 John 3:5. John 15:3 1 Corinthians 3:6-9• 1 Peter 1:22 1 Peter 3:21 Revelation 22:1-2, 14, 17.

2. நீரூற்று, கிணறு = நல்லாயன்(Pastor) (வெளி 22:17),(நீதி 10:11), (ஏசா 12:3)(யோவா 4:13-14, 15:3)நல்லாயனின் ஆலயம் (சக 13:1), (யோவா 2:19-20) நீரூற்றுகள், கிணறுகள் இருவகைப் படும். ஒன்று கடவுளின் நீரூற்று இரண்டாவது, சாத்தானின் நீரூற்று (2பேது 2:17), (எரே 2:13) Other references: Song of Solomon 4:15 Isaiah 58:11. 1 Corinthians 10:4 James 3:11 Revelation 7:17 Revelation 22:1 John 2:21 Revelation 1:1-2 Revelation 10:8-11.

3. ஆறு = சீஷர்(யோவா 7:37-38) போதகரின் இருதயம் (எஸ்றா 7:10).
ஆறுகள் இருவகைப் படும். ஒன்று கடவுளின் ஆறு (வெளி 22:1-2).
தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டுவருவது. இரண்டாவது, சாத்தானின் ஆறு(வெளி 16:4,14).
சாத்தானிடமிருந்து வரும் பொய் வார்த்தைகளைப் பெற்று போதிக்கும் போதகர்கள். இவர்கள் கடவுளால் நேரடியாகத்  தண்டிக்கப்படுவர்.Other references: John 17:8 John  Revelation 16: 12 Revelation 8:10 Ezekiel 47:1-12

VIII. கடல், மீனவர், வலை, மீன், கப்பல்

1.கடல் = பலதரப்பட்ட போதனைகளை கொண்ட கிறிஸ்துவ உலகம்(பூமி), எல்லா மக்களுமுள்ள உலகம் (மத் 13: 47-48). கடல் இருவகையில் பொருள்படும். ஒன்று உலகப்பிரகாரமானது. மற்றொன்று ஆன்மீகப் பிரகாரமானது. முதலாவது, எல்லாவகையான (வலுசர்பம், லிவியாதான் - ஏசா 27:1) மிருகங்களை உள்ளடக்கிய கடல் பற்றியது. இரண்டாவது, சாத்தானாலும், அவனது கலப்படமான மத கோட்பாடுகளாலும்  ஆளப்படும் ஆன்மீக உலகம் பற்றியது. உதாரணம் இயேசுவின் முதல் வருகையில் இருந்த 'யூதமதம்',  இரண்டாம் வருகையின் நாட்களான இந்த நாட்களிலுள்ள பிளவுபட்டுள்ள 'கிறிஸ்துவம்'.

 இந்த ஆன்மீகப் பிரகாரமான கடல்களும் இருவகைப்படும்.
(ஆதி 1:6-10) ஒன்று ஆகாயவிரிவிற்கு மேல் உள்ள கடவுளின் சிங்காசனத்திற்கு முன்புள்ள பளிங்குக்கொப்பான கண்ணாடிக்கடல் = வெளிப் படுத்தப்பட்ட தேவ வார்த்தை (வெளி 4:6), (எசே 47:8-10) இதுவே வெளி 22:1-2ல் புதிய யோவான் நேரில் கண்டு கேட்டு சாட்சியிடும் வாழ்வளிக்கும் வார்த்தை. மற்றொன்று 'கீழுள்ள சமுத்திரம்' சாத்தானின் கடல் = சாத்தானாலும், அவன் கலப்படமான மத கோட்பாடுகளாலும், மனித கற்பனைப் போதனை(பருகக் கூடாத உவர்நீர்) போன்றவற்றாலும்  ஆளப்படும் ஆன்மீக உலகம் (வெளி 18:2-3). Other references: Daniel 7:3, 17 Psalms 74:13-14 Isaiah 27:1 Revelation 13:1-2 Revelation 17:1-3, 15 Revelation 18:2-3 Revelation 22:1-2 . Revelation 15:2

2. மீனவர் = போதகர், நற்செய்தியாளர் (மத் 4:18-20). இயேசு அன்று யூத மத்திலிருந்து மனிதர்களைப் பிடிக்க மீனவரான சீடர்களை அழைத்தார், இன்று கிறிஸ்துவத்திலிருந்து விசுவாசிகளைப் பிடிக்க ஆன்மீக மீனவரான புதிய யோவானை இயேசுவே  அபிஷேகித்துள்ளார்.  ஆனால் சாத்தானின் மீனவர்களான பரிசேயரும், சதுசேயரும்,வேத பாரகரும் வேதத்தை தங்கள் இச்சைகளின்படி மாற்றி போதித்தனர் தற்கால ஊழியர்களைப் போல. அவற்றில் உண்மையில்லை. Other references: Ezekiel 47:8-10 Habakkuk 1:14-17 Matthew 13:47-48  Isaiah 19:5-8 Revelation 18:17-19

3. வலை = வேத வார்த்தை (மத் 13:47-48). பரலோக ராஜ்ஜியத்திற்கு ஒப்பிடப்படும் இந்த வலைகள் இருவகைப்படும். சாத்தானின் வலை, அவனது பொய்கலந்த வார்த்தைகளும், தப்பரைகளும், மதக்கோட்பாடுகளும், மனித போதனைகளான வேத விளக்க உரைகளும் (சங் 141:10), அவனுடைய சபைக்கு ஆட்களைப் பிடிக்கிறது.
இரண்டாவது, வெளிப்படுத்தப்பட்ட தேவ வார்த்தை, இது எல்லாவகை மீன்களையும் கடலிலிருந்து வாரிவந்தாலும், நல்ல மீன்களை தூதர்கள் பிரித்து கூடையிலும் கெட்ட மீன்களை வெளியிலும் போடுவது போல வெளிப்படுத்தப்பட்ட தேவ வார்த்தையின் அடிப்படையில் தேவ ராஜ்ஜியத்துக்கு உகந்தவர்கள், ஒவ்வாதவர்கள் என பிரித்து பரலோகத்திலும், நரகத்திலும் சேர்ப்பர்.
கூடை = பரலோகம். வெளி = நரகம்.
மீன் = (நல்ல, கெட்ட) மனிதர்கள்.
மாலுமிகள் = சபையை வழி நடத்தும் போதகர்கள்.
வியாபாரிகள் = வார்த்தையை வாங்கி (விற்கும்) கொடுக்கும் நற்செய்தியாளர் (Eva)
கப்பல் (இரட்சிப்பின் பேழை) = சபை (ஆதி 7:1). தேவ வார்த்தையில்லா பாபிலோனிய சபைகள் அழிக்கப்படும். (வெளி 8:9, 18:17-19)
Other references: Matthew 13:47-50• Matthew 24:37-39 Luke 17:26-27 Revelation 15:5 Revelation 18:17-19 Genesis 7.
 
IX. மிருகம், தலை, கொம்பு, வால்

1. மிருகம் = தேவனையும், தேவ வார்த்தையையும் அறியாமலும், புரிந்து கொள்ளாமலும் வாழும் நபர்( வெளி 13:2),(சங் 49;20),( நீதி 18:13, 30:2-3), தாங்கள் அறியாதவற்றை தூஷிப்பவர்.(2பேது 2:12).
வேதத்திலுள்ள உவமைகளில் குறிப்பிடப்படும் மிருகங்கள் மூன்று வகைப்படும். முதலாவது, வார்த்தையை ஏற்றபின் (விசுவாச துரோகிகள்) (B) மறுதலிப்பவரைக் குறிக்கும், நாய், பன்றி, தொலைந்த ஆடு.(2 Pt 2:20-22, Mt 22:4, Is 56:9-11).
இரண்டாவது, தேவ வார்த்தையையும் அதனை ஏற்றுக்கொண்ட விசுவாசிகளையும் (D)அழிப்பவரைக் குறிக்கும் பாம்பு, டிராகன், சிங்கம், ஓனாய்,தேள், வெட்டுக்கிளி. (Rv 20:2, Rv 13:2, Jn 10:12). மூன்றாவது, தேவ வார்த்தையை ஏற்றுக்கொண்டு(S) இரட்ச்சிக்கப்பட்டோரைக் குறிக்கும் செம்மறி, காளை, குதிரை, ஆட்டுக்குட்டி.(Jn 1:29, Mt 25:31-34, Rv 19:11, 19).
மனிதன் = தேவனையும், தேவ வார்த்தையையும் அறிந்து, புரிந்து கொள்ளும் நபர். (1 கொரி 2:6-8.12-13). Other references: Psalm 73:22 Titus 1:12 Jude 1:10 Matthew 7:15.

2. தலை, ராஜா (KING) = தலைமை போதகர்(குழுவுக்கு) சபைத்தலைவர்.(வெளி 12:3-4), (ஏசா29:10). ராஜ்ஜியம் (KINGDOM) = திருச்சபை. 
கொம்பு = மூப்பர், சொந்த சபை இல்லை ஆனால் சபையில் அதிகாரம் பெற்ற நபர்(வெளி 17:12)
வால் = சாத்தானுடைய கள்ளதீர்க்கதரிசிகள் (ஏசா 9:14-16) 
ஏழு தலைகள் பத்து கொம்புள்ள மிருகம் = எழு தலைமைப் போதகர்கள் மற்றும் பத்து மூப்பர்களையும், கள்ளதீர்க்கதரிசிகளையும் கொண்ட சாத்தானின் அமைப்பு.(CSTC). வெளிப்படுத்தலின் நிறைவேற்றத்தை சாட்சியிடுவது தேவனின் கூட்டம். ஆனால் அவர்களை தூற்றி தூஷித்து துன்புறுத்துவது, சாத்தானின் கூட்டம்.
Other references: Isaiah 9:15 Isaiah 29:10 Ephesians 4:15 Genesis 3:15 Ephesians 1:22 Revelation 13:1-2 Revelation 17: 3, 9, 12 Deuteronomy 28:12-15, 41-44 (2 Peter 2:19) Revelation 9:19 Revelation 5:6 Daniel 7:24 Lamentations 2:3 Isaiah 9:14-16.

X. செம்மறியானவரின் உடல், மற்றும் இரத்தம் = வாழ்வளிக்கும் இயேசுவின் உண்மையுள்ள வார்த்தைகள்(வெளி 7:14). இயேசுவின் உடலையும் இரத்தத்தையும் உட்கொள்வது(யோவா 6:53-57, 63,68) என்பது, இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு, உணர்ந்து, கைக்கோள்ளுதல் ஆகும்(1யோவா 1:1-4). இந்த பாஸ்கா ஆட்டுக்குட்டியின்(யோவா 1:29) இரத்தத்தால் இரட்சிக்கப்பட்டு, பாவங்கள் மன்னிக்கப்பட்டு, சாவிலிருந்து கடவுளின் பிள்ளைகளாய் வாழ்வுக்குக் (பரலோகம்) கடந்து செல்வோம்.
சாத்தானின் உடலையும் இரத்தத்தையும் (பொய்ப்போதனைகள்) உட்கொண்டால் நரகத்திற்கு செல்வோம். Other references: Exodus 12:1-14, 46 Isaiah 53: 5,7  1Corinthians 5:7 Leviticus 17:11 Luke 22:14-20. Revelation 1:5-6, 5:9-10, 11:6, 16:3, 17: 14,16, 18:4. Revelation 10 John 19:36.

XI. திராட்சரசம், ஒலிவ எண்ணை

1. திராட்ச்சைச் செடி = போதகர், தெரிந்தெடுக்கப்பட்ட ஜனம் (யோவா 15:1).
திராட்சரசம் =  வார்த்தை (கோட்பாடு) 
புதிய திராட்சரசம் = வெளிப்படுத்தப்பட்ட தேவ வார்த்தை(லூக் 5:37-39)
பழைய திராட்சரசம் = முத்திரிக்கப்பட்ட, வெளிப்படுத்தப்படாத தேவ வார்த்தை, மனித கற்பனை போதனைகள். 
பழைய துணி, சித்தை, துருத்தி, பை = முத்திரிக்கப்பட்ட தேவ வார்த்தையை கொண்ட மனிதர்களின் இருதயம். (ஏசா 1:22, 5:1-2,7)
புதிய துணி, சித்தை, துருத்தி, பை = வெளிப்படுத்தப்பட்ட தேவ வார்த்தையை  ஏற்ற மனிதர்களின் இருதயம். 
பழையதை புதியதோடும், புதியதை பழையதோடும் இணைக்கக்கூடாது. இணைத்தால் இரண்டும் பாழகும்.
Other references: Isaiah 55:1-3 Isaiah 25:6-8 John 1:17 Luke 16:16 Luke 22:14-20 Revelation 18:3 Matthew 26:26-29 Revelation 22:16 . Galatians 3:23-24 Deuteronomy 32:31-33 Revelation 17:2 Revelation 2:17 Revelation 10 Revelation 7.

2. ஒலிவ எண்ணை = சாட்சியின் சாட்சியம் (வெளி 1:2, 6:6, 11:3-4), (சக 4:1-4,11,14).
யாத் 27:20-21 ல் நித்திய கட்டளையாக கொடுக்கப்பட்டதல்லவா, சாயங்காலம் தொடங்கி விடியற்காலம்மட்டும் கர்த்தருடைய சந்நிதானத்தில் ஒலிவ எண்ணையில் விளக்கை எரியச்
செய்ததுபோல், இந்த சாட்சி(விளக்கு) இயேசு(ஒளி) பரலோகம் சென்று(இரவு)திரும்பி வரும்வரை, இரண்டாம் வருகைவரை (பகல்) பெற்ற ஒளியைக்கொண்டு இருளிலுள்ள மக்களை பேரொளியான கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு தயார்படுத்துகிறார்.வெளிப்படுத்தலின் காலத்தில், நிறையேறிய நிறைவேற்றத்தை நேரில் கண்டு, கேட்டு அவை நிறையேறிய விதம், இடம், நபர் ஆகியவற்றை உண்மையுள்ள சாட்சியாக (ஒலிவமரத்தின் எண்ணையாக) உலகிற்கு சாட்சியிட்டுவருகிறார்.
Other references: Revelation 4:5 Exodus 27:20-21 Leviticus 24:1-4 Hebrews 8:5 Hebrews 9:9-10 Revelation 1:2 Revelation 22:8, 16 Matthew 25:1-13 Psalm 119:105 2 Peter 1:19

XII. மலை, பாறை = சபை, பன்படாத நிலம், கடின இருதயம் (வெளி 6:14), (மத் 24:15-16), (ஏசா 2:2-3)
1. விசுவாச துரோகிகளின்(B) மலை TT(Tabernacle Temple) = ஏழுபொன் குத்துவிளக்குகளின் (7 தூதர்கள்) சபை (வெளி1:20), (வெளி13:4-7, 16.
2. சாத்தானின் பாழாக்கும் சபை(D) = ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையும் உடையதும் தூஷணமான நாமங்களால் நிறைந்ததுமான சிவப்புநிறமுள்ள மிருகத்தின்மேல் ஏரியிருந்த ஸ்திரீயின் சபை (CSTC) (மத் 24:15-16), (வெளி 17:1-5, 9). ஏழு தலைகள் = அந்த ஸ்திரீ உட்கார்ந்திருக்கிற ஏழு மலைகள்.
3. கடவுளின் சீயோன் மலை, சாட்சியின் கூடாரமாகிய (S) ஆலயம் TTT(Temple of Tabernacle of Testimony) = பிதாவின் நாமம் தங்கள் நெற்றிகளில் எழுதப்பட்டிருந்த இலட்சத்து நாற்பத்து நாலாரயிரம் பேரின் சபை.(வெளி14:1-5), (ஏசா 25:6-8), (எபி 12: 22-24).

பாறையை நொறுக்கும் சம்மட்டி = தேவ வார்த்தை.
வேசி = தேவனோடு திருமண(உடன்படிக்கை) உறவில் இணைக்கப்பட்ட பின் சாத்தானின் வித்தைப் பெற்று அவன் பிள்ளைகளைப் பெற்றெடுக்கும்(பெண்) போதகர்.
வேசித்தனம் = தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டோர் படைத்த அவரை, மணந்த அவரை மறந்து சாத்தானை பின்பற்றுதல்.
Other references: 2 Thessalonians 2:1-3  Genesis 2:8 Ezekiel 36:1-4 Revelation 6:14 Isaiah 1:29 Jeremiah 51:25 Psalm 132:13-14 Isaiah 25:6-8 Isaiah 16:1 Isaiah 60:14 Isaiah 2:2-3 Revelation 15:2-5 Psalm 133:3

XIII. முத்திரை, எக்காளம், பாடல்

1. முத்திரை(Mark) = வேத வார்த்தை, வேத வார்த்தையை கொண்டிருப்பவர் (பெற்றிருப்பவர்).(வெளி 7:2-4), (யோவா 3:31-33). முத்திரை இரண்டு வகைப்படும்.ஒன்று கடவுளின் முத்திரை (யோவா 6:27) = நம்மை பரலோகத்தில் ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கும்(வெளி 1:6, 7:1-8). 
மற்றொன்று சாத்தானின் முத்திரை = மதக்கோட்பாடுகள், பொய்கள் கலந்த வேத வார்த்தைகள், மனித போதனைகள் (வெளி 17 :4-5). இது அவர்களை சாத்தானின் பிள்ளைகளாக்கி அழியாத நரகத்தில் சேர்க்கும்.
முத்திரையிடுதல் = தேவ வார்த்தையை சாட்சியாக அறிவித்தல்.
முத்திரையிடப்படுதல் = சாட்சியாக அறிவித்த தேவ வார்த்தையை கேட்க தெரிந்து கொள்ளப்படுதல்,கேட்டு உண்மையென ஏற்றுக்கொள்ளல், பாவங்கள் கழுவப்படல், இதயத்தில் எழுதுதல்.
(எபி 8:10-12), (2 கொரி 3:2-3), (ரோம 4:11). 
 Other references: Job 33:16 (KJV) John 1:1 Haggai 2:23 John 17:8-9 2 Corinthians 1:22 Ephesians 1:13 2 Timothy 2:19 Revelation 10:1-2, 8-11 Revelation 14:1-5. Revelation 22:3-4  1Timothy 4:1-2 Revelation 13:16-18 Revelation 14:9-11 Revelation 10 . Revelation 7:1-8

2. எக்காளம் = தேவ வார்த்தையை கூறும் மனிதன்.(மத் 24:29-31),(ஏசா 18:3, 58:1),(ரோம 10:13-15).
எக்காளம் ஊதுபவர் = ஆவி, எக்காள சத்தம் = சீயோனிலிருந்து வெளிப் படுத்தப்படும் தேவ வார்த்தை. (யோவே 2:1, 15-17).இதுவே ஏழாம் எக்காளம் ஊதப்படும் காலம், இதுவே அந்த ஏழாம்  எக்காளத்தின் ஒலி. காலம் நிறைவேறாததாலும், பவுலடிகலாருக்கு அது முழுமையாக வெளிப்படுத்தப் படாததாலும் அவர் இதை கடைசி எக்காளம் என்கிறார்(1 கொரி 15:51-54). இயேசுவின் இரண்டாம் வருகையின் காலத்தின் எக்காளம் புதிய யோவான்.
Other references: Revelation 10:7-11 Matthew 3:16 Matthew 10:20 John 14:24 Revelation 11:15 Revelation 14:1,6 Revelation 18:22.

3. பாடல் = தீர்க்கதரிசனம்.(வெளி 15:2-3)
மோசேயின் பாட்டு = பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்கள்(வெளி 15:2-3,  18: 22), (உபா 31:19, 30). ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டு = புதிய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்களும் அவற்றின் நிறைவேறுதலும்(வெளி 5:9-10, 14: 1-6). Other references: Deuteronomy 31:30 Psalm 119:54, 172 Psalm 138:5 Isaiah 55:12 Deuteronomy 31:19-21 • Deuteronomy 32:44 Psalm 33:3 Psalm 40:3-4 Isaiah 42:9-10 Isaiah 48:6-7 Isaiah 52:15 Isaiah 25:5 Revelation 18:22 Revelation 7:1-8 Revelation 2:17 Revelation 10 Revelation 15:2-3

XIV. கல், உருவம்

1. கல், கன்மலை = தேவனின் நியாந்தீர்க்கும் வார்த்தை (யோவா 12:48), (வெளி 2:7), (யாத் 31:18), (2பேது 2:4-8)
நியாந்தீர்க்கும் அதிகாரமுள்ள நல்லாயன்(யோவா 5:22), (தானி 2:34-35), (1பேது 2:4), (ஏசா28:16)(யோவா 5:29).
கன்மலை = கிறிஸ்து இயேசு(உபா 32:31),(வெளி 6:15-16)
Other references: Daniel 2:44-45 Matthew 21:42-46 Psalm 118:22 . 1 John 5:30 Revelation 18:2 John 17:8 Revelation 14:1 Revelation 15:4-5

2. உருவம், சிலை(Idol)= கள்ள போதகர்(ஆயன்-False Pastor)(வெளி 13:14-15). உண்மையான தேவ வார்த்தை(உயிர்) தங்களிடம் இல்லாதபோதும், 'தேவ ஊழியர்கள்' என்ற பெயரில் மனிதர்களின் மதிப்பையும், மரியாதையையும் பெருவதோடு அவர்களின் சேவையை பெறுபவர் (தானி 2:31-35, 41-44). அவர்கள் தங்களை எல்லோருக்கும்முன் பெரியவர்களாக காட்ட முயல்வதால் தங்களைத் தாங்களே மக்கள்முன் வணக்கம் பெரும் பெரிய சிலைகளாக்கிக் கொள்கிறார்கள்(மத் 23:2-7)
சிலை வணக்கம் செய்வோர் = கள்ள போதக்கர்களை சேவிப்போர்.
சிலைகளுக்கு படைக்கப்பட்ட உணவு = கள்ள போதகர்களின் வார்த்தைகள் (சாத்தானின் பொய்கலந்த வார்த்தைகள், மத கோட்பாடுகள், மனித போதனைகள்) (வெளி 13:14-15)
Other references: Habakkuk 2:18 Revelation 17:1-10 Exodus 20:4-6 Psalm 115:4-8 Colossians 3:5-6 Isaiah 41:21-24, 29 Revelation 20:4-6 Revelation 2:14-15 Revelation 14:9-11 Revelation 21:8 Revelation 22:15 2Corinthians 6:14-18 Revelation 15:2-5

XV. நான்கு ஜீவன்கள், உருவங்கள் (சிங்கம், கழுகு, காளை/எருது, மனிதன்), காற்று
 
1. நான்கு ஜீவன்கள்(எசே 1:5, 10:19-20, 11:22) = நான்கு (கேருபீன்கள்)பிரதான வானதூதர்கள்(வெளி 4:6-8) அவர்கள் பரலோகத்தில் பெற்றுள்ள பொறுப்புகள்.(வெளி 6)ல் குறிப்பிடப்பட்டுள்ள நான்கு குதிரைகளும், (சக 1:8-10, 6:5-7)ல் குறிப்பிடப்பட்டுள்ள நான்கு குதிரைகளும்,ரதங்களும் குறிப்பிடுவது இந்த நான்கு ஜீவன்களையே. இவர்கள் சிங்காசனத்திற்கு முன்பாக இருந்து வணங்குவதோடு கடவுளோடு இணைந்து பணியாற்றி பூமியில் அவர் சித்தத்தை நிறைவேற்றுகிறார்கள்.(வெளி 4:9-11)
சிங்கம் = விலங்குகளை(Gentiles) தீர்ப்பிடும் அதிகாரம்.
கழுகு = பறவைகளை (ஆவிகள்) தீர்ப்பிடும் அதிகாரம்.
காளை = மனித மனங்களை துன்பங்கள், சோதனைகள் மூலம் உழுது களைகளை நீக்கி, பன்படுத்தும் அதிகாரம்.
மனிதன் = மனிதர்களை (உண்மை, பொய்) என தீர்ப்பிடும் அதிகாரம்.
கண்கள் = பூமியெங்கும் அனுப்பப்படுக்கிற தேவனுடைய ஆவிகள்(வெளி 5:6)
Other references: Isaiah 6:2 Revelation 14:1-5 Revelation 6:1-8 Revelation 3:12 Luke 17:22-24 Revelation 22:16
 
2. காற்று = தண்டனை, நியாயதீர்ப்பு(வெளி 7:1-2)(எசே 14:21),(எபி1:7)

XVI. இறப்பு, கல்லறை, உயிர் மூச்சு, உயிர் பெறல்
 
1. மரணம், இறப்பு(Spiritual) = வார்த்தையில்லாத,தேவனோடுள்ள உயிர்த் தொடர்பு அறுபட்ட நிலை(only physical body) (மத் 8:22),(எபே 4:18), (ஆதி 2:17), (எசே 18:4)(ரோம 6:23) கள்ளத்தீர்க்கதரிசன சபை. கல்லறை = தேவ ஆவி ஒருவரிடமிருந்து வெளியேறிய நிலை. (லூக்கா 11:44),(ரோம 3:13).
Other references: John 6:53 Revelation 3:1 Revelation 11:7-10  Matthew 23:27-28 Ezekiel 37:1-14 Matthew 27:51-53 Revelation 14:1-3 Hebrews 2:14 Revelation 17-18 Mark 12:27 Revelation 18:4

2. உயிர் மூச்சு, உயிர் பெறல் = (ஆதி 2:7), (யோவா 5:25-29, 6:63), (வெளி 20:14, 21:4, 22:3), மரணமும், சாபமும் இல்லாத நித்திய வாழ்வு. அதுவே பரலோகம்.பூமியில் தேவனோடு வாழும் மனிதம்.
Other references: Ezekiel 37:1-14 Revelation 11:11 John 1:1-4 . Zechariah 12:1 Revelation 10:8-11 Revelation 17:14 Revelation 18:4   Acts 26:17-18 Revelation 13:15  Revelation 16:12 Revelation 14:1 1 Corinthians 15:45.

XVII. மணமகன், மணமகள், விதவை, பெற்றோரில்லாத பிள்ளை

1. மணமகன் + மணமகள் =  ஆவி + மனித உடல் (ஓசி 2:16, 19-20)
ஆட்டுக்குட்டியின் திருமணம்: இயேசுவுக்கும்(ஆவி) புதிய யோவானுக்கும்(மனித உடல்), இரத்தசாட்சிகளின் ஆவிகளுக்கும் முத்திரையிடப்பட்ட  இலட்ச்த்து நாற்பத்து நாலாயிரம் பேர்களும்,வெண்ணாடை அணிந்த பெருங்கூட்டத்திற்கும்.(வெளி 19:7-9)
Other references: Isaiah 62:1-5 John 10:30 Matthew 9:14-15 Matthew 22:1-14, 25:1-13 Revelation 19:7-9, 20:4-6, 21:1-4, 10.

2. விதவை = சாத்தானின் வார்த்தையை நம்பி ஏற்று, இயேசுவுக்கு விசுவாச துரோகம் செய்த ஆயன் (எரே 3:1, 3, 13, 16:15, 33)
பெற்றோரில்லாத பிள்ளை =  ஆயனால் கைவிடப்பட்ட விசுவாசி.
 (புல 5:3). Other references:

XVIII. போர், எருசலேம், பாபிலோன்

1. போர் = மத கோட்பாகளின் மோதல் (மத் 24:6-8), (எபே 6:12)
Other references:  2 Corinthians 10:3-6 Ephesians 6:10-17  Deuteronomy 28:7, 25 Revelation 2-3, Revelation 12:7-11, 13:5-7, 14:1-5,  15:2-3.

2. எருசலேம் = தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் தேசம் லூக் 21:20 
பாபிலோன் = புறவினத்தாராரைக் கொண்ட சாத்தானின் தேசம் (வெளி17:5)
Other references: Jeremiah 3:17 Matthew 11:12 Revelation 18:2 Isaiah 1:1, 7 Isaiah 2:1-4 Zechariah 2:7 Zechariah 8:3 • Revelation 17:1-5 Revelation 18 Matthew 24:15-16 Revelation 11:2 Revelation 13:1-2, 5-7 • Revelation 17:14 Revelation 18:2-4 Revelation 14:1-3 Revelation 21:1-4

XIX. வானம், பூமி, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், 

1. வானம் = பரலோகம், ஆன்மீக உலகம், தேவனால் தெரிந்து கொள்ளப் பட்டவர்களின் சபைகள் (TT, TTT), பூமியை ஆள்பவர்கள்.
பூமி = மனிதர்களின்புற உலகம், சாத்தானின் மக்கள்,சபைகள் (2 பேது 3:7)
Other references: Psalm 11:4 Revelation 13:6  Genesis 1:2, 6-8, 10 2 Peter 3:10-13 Revelation 13 . Revelation 6 Revelation 13:6 Revelation 15:5. Matthew 11:12 Revelation 21:1 Revelation 7 Isaiah 65:17  Isaiah 66:22 Revelation 15:1-2, 5 Revelation 14 Matthew 24:29, 35 Matthew 8:11-12 Revelation 21:1-7

1. சூரியன் =  தந்தை, போதகர், ஆயன்(Shepherd) (ஆதி 37:10)
சந்திரன் =  தாய், நற்செய்தியாளர்(Evangelist) (மத் 24-29)
நட்சத்திரங்கள் = சகோதரர், விசுவாசிகள்(Congregation)
வெளிப்படுத்தல் நூலில் குறிப்பிடப்படும், ஆறாம் முத்திரையை இயேசு உடைத்தபோது நிறைவேறி, விழுந்துபோன சூரிய சந்திர நட்சத்திரங்கள்(வெளி 6:12-13) =  தேவனால் தெரிந்தெடுக்கப்பட்டு பின் உடன்படிக்கையை மீறி நம்பிக்கை துரோகம் செய்து (B) விழுந்துபோன இஸ்ரவேலரையும்ஏழுபொன் குத்துவிளக்குகளின் (7தூதர்கள்) TT 
சபைகளையும் குறிக்கும்.(வெளி 13:4-7). வெளி 21:1 குறிப்பிடும் ஒழிந்துபோன ’முந்தின’வானம் இவர்களே.
Other references: Genesis 37:9-11 Genesis 1:14-16 Joel 2:10, 31 Revelation 6:12-13 Psalm 84:11 Malachi 4:2 Daniel 12:3 Matthew 24:29-31 Isaiah 14:13 Revelation 21:1 Revelation 7 Revelation 8:10 Revelation 21:1-7 Revelation 15:5 Revelation 16:8

XX. மூன்று வகையான இஸ்ரவேலர்

இஸ்ரவேலர் = ஜெயங்கொண்டவர்கள், வெற்றிபெற்றவர்கள் (வெளி 7:4)
1.  நிஜ இஸ்ரவேலர் = யாக்கோபின் பன்னிரு புத்திரர்கள்.(ஆதி 35:23-26) இந்த கால யுகம் இயேசுவின் முதல் வருகையோடு நிறைவுற்றது. இவர்கள் கைவிடப்பட்டனர் (அப் 13:46), (லூக் 13:29)
2. பழைய ஆன்மீக இஸ்ரவேலர் = TT,   மாம்சத்தில் வெளிப்பட்ட இயேசுவும் அவருடைய பன்னிரு சீஷர்களும். இந்த கால யுகம் இயேசுவின் இரண்டாம் வருகையில்  நிறைவுபெறும். தேவனால் தெரிந்தெடுக்கப்பட்டு பின் உடன்படிக்கையை மீறி விசுவாச துரோகம்  செய்து (B) விழுந்துபோனஏழுபொன் குத்து விளக்குகளின்(7தூதர்கள்) சபை, மற்றும் இன்றைய கிறிஸ்துவம் (பிரிந்துகிடக்கும் எல்லாசபைகளும்) இவர்கள் சாத்தானோடு இணைந்துள்ளதால்(வெளி 18:4) தீர்ப்பிடப்பட, இயேசுவின் இரண்டாம் வருகையில், நிலமாகிய சபையோடே கைவிடப்படுவர்.(வெளி 13:4-7), (மத் 24:40)
3. புதிய ஆன்மீக இஸ்ரவேலர் = TTT, இயேசுவின் சீடர்களின் பெயர்களில் உருவாக்கப்பட்டுள்ள பன்னிரு கோத்திரங்கள். இவர்கள் தேவ தூதர்களால் அறுவடை செய்யப்பட்டு இயேசுவின் களஞ்சியமான வானத்தில்(Barn) சேர்க்கப்பட்டு, ஜீவ புஸ்தகத்தில் (Church Register) பெயரெழுதப்பட்டு, ஒவ்வொரு கோத்திரத்திற்கும் பன்னீராயிரம் வீதம், வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையால் சாத்தானை ஜெயங்கொண்டு முத்திரையிடப்பட்ட (12X12) இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர்களும், இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டு வெண்ணாடை அணிந்த பெருங்கூட்டமும். (வெளி 14: 1-5) இந்த சபையே ஜீவத் தண்ணீருள்ள நதியோரம் வளர்ந்து மாதந்தோறும் பன்னிரண்டு விதமானகனிகளைக் கொடுக்கும் ஜீவவிருட்சம். இதன் கனிகள் நித்திய வாழ்வளிக்கும், இதன் இலைகள் தேசத்தை குணமாக்கும் மருந்தாகும் (வெளி 22:1-2). முடிவில்லாமல் நித்தியத்தில் தேவனோடு வாழப்போகும் கூட்டம் இதுவே.
Other references: Genesis 32:28 Genesis 35:10 Genesis 49:28 Joel 2:31 Luke 16:16 John 16:33 Revelation 6:12-13 Revelation 12:7-11 Revelation 7 Daniel 2:44 Revelation 14:14-16 Revelation 14:1-5 Revelation 21:1-7 Matthew 24:29

XX1. பரலோகம், சாவி
1. பரலோகம் =  தேவன் வாழும் இடம், ஆளும் ராஜ்ஜியம் (மத் 13:11)
பரலோகம் இருவகைப்படும். ஒன்று தேவன் வாழும் ஆன்மீக உலகமான பரிசுத்த நகரம் (புதிய எருசலேம்) மற்றொன்று உலகப் பிரகாரமானது, அது 'புதிய வானம் புதிய பூமி' (NHNE) பன்னிரு கோத்திரங்கள் தேவனோடு இப்பூமியில் வாழப்போகும் இடம்.
முந்தின வானம் = தேவன் அகன்றதால் ஒழிந்துபோன பரலோகம்.
புதிய வானம் = மறு உருவாக்கம் செய்யப்பட்ட பரலோகம். தேவன் மீண்டும் வந்ததால், உயிர்த்தொடர்பு புதுப்பிக்கப்பட்டு, இயேசுவின் இரத்தத்தால் பரிசுத்தமாக்கப்பட்டு, நித்திய வாழ்வில் இணைந்த மனிதர்களும் வாழும் இடமாக மாறும்.
Other references: Revelation 21:1-2 Ezekiel 1 Revelation 4 Psalm 11:4. Matthew 11:12 Matthew 13:24, 31-32, 37 Revelation 13:6, 3 Revelation 14:1-5 Revelation 21:1-2 Matthew 6:10 Revelation 3:12 Revelation 4:2-8 Revelation 15:2-5 Revelation 21:1-7

2. சாவி = வேதத்தில் உவமைகளில் மறைந்துள்ள தேவ இரகசியங்களை அறியும் ஞானம். (சங்119:13) (வெளி 1:18).
Other references: Isaiah 22:22 Matthew 16:19 Revelation 3:7  Revelation 9:1 Revelation 20:1-3 Psalm 78:2 . John 16:25 Revelation 1:20 Revelation 17:5, 7 Revelation 10:7
 
 ஓசியா 4:6 ன் பின்பகுதியில்' நீ உன் தேவனுடைய வேதத்தை மறந்தாய், ஆகையால் நானும் உன் பிள்ளைகளை மறந்துவிடுவேன்.' என்று தேவன் கூறியதுபோல, நாம் வேதத்தைத் தள்ளினதால், வேத அறிவில்லாமல் கட்டுக்கதைகளுக்கும் வெற்று அலங்கார கூச்சல்களுக்கும், கடவுளின் அருகிலிருநது பேசுபவர் போல பாசாங்கு செய்வோரின் ஓரங்க நாடகத்திற்கும் வீணாக நேரம் செலவழிக்காமல், வல்லமையுள்ள தேவ வார்த்தையை ஆராய்ந்து அறிய அதிகநேரத்தை செலவிடுவோம்! 

நம்முடைய விசுவாச வாழ்க்கையின் நோக்கமான நித்தியவாழ்வைப் பெற முயல்வோம்!! யாருடைய இருதயத்தில் வெளிப்படுத்தப்பட்ட தேவவார்த்தை முத்திரையிடப்பட்டுள்ளதோ அவரையே அறுவடையின் போது தேவ தூதர்கள் அறுவடை செய்து அவருடைய களஞ்சியத்தில்(சபை,வானம்) சேர்ப்பார்கள்.

இந்த வார்த்தையே தேவனின் வித்து. வார்த்தையான இயோசுவோடு நாம் கிளையாக  இணைந்திருந்தால்தான் நாம் கனிகொடுக்க முடியும். இந்த விதையையே இயேசு நம் இருதயமாகிய நிலத்தில் விதைத்தார். நல்லநிலத்தில் விழுந்தால் மட்டுமே இது அறுபதும் நூறுமாக பயன்தரும்.

பலன்தரும் நல்ல மரமாக வளர்ந்தால் மட்டுமே பறவைகள்(இரத்த சாட்சிகளின் ஆவிகள்) விரும்பி நம்முள் வந்து தங்கும். இதுதான் வெளி 19ம் அதிகாரம் சொல்லும் ஆவி- மனித உடல் இணையும் திருமணம்(மறுரூபமாதல்). தேவனின் வல்லமையுள்ள இந்த வார்த்தையே நம்மை மருரூபமாக்கி தேவனுடைய இராஜ்ஜியத்தில் நடைபெறவிருக்கும் ஆட்டுக்குட்டியானவருடைய கலியான விருந்தில் பங்கெடுக்க தகுதிபெறச் செய்யும். 

இந்த சுத்திகரிக்கும் ஜீவத்தண்ணீரே நம்மை நாள்தோறும் தூய்மையாக்கும். இந்த வார்த்தையே (இயேசுவின் இரத்தம்) நம்மை பாவங்களர கழுவி கலியாண உடையான வெண்ணாடையை பெற்று அவ்விருந்தில் பங்குபெற தகுதிப் படுத்தும்! இதுவே இலவசமாக இயேசு வழங்கும் ஜீவத்தண்ணீர் ஊற்று, ஓடை, நதி, ஆறு எல்லாம். 

அதனண்டையில் வளர்ந்து ஒவ்வொரு மாதமும் பனிரண்டு வகையான கனிகளை நமக்கு கொடுக்கும் வாழ்வளிக்கும் மரம் இதுவே TTT. அதன் கனி நம் ஆன்மாக்களுக்கு உணவு அதன் இலைகள் தேசத்தின் நோய்களுக்கான மருந்து. இயேசுவின் வார்த்தையின் வித்திலிருந்து முளைத்து, அவரையே மையமாகக் கொண்டு, அவரின் தூதன் மூலமாக உருவாக்கப்பட்டுள்ள வாழ்வளிக்கும் மரமாக வளர்ந்துள்ள இந்த சபையாகிய வாழ்வின் மரத்திலிருந்து புசித்து ஆன்மீக பலம் பெறுவதோடு நம் தேசம் குணப்படும் படியான மருந்தையும் பெறுவோம்.


No comments:

Post a Comment