Thursday, 4 September 2025

புதிய ஏற்பாட்டில் இயேசுவின் தீர்க்கதரிசன வாக்குறுதிகள் !

தீர்க்க தரிசனங்கள்...

"கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்."(ஆமோஸ் 3:7)  'அந்தத்திலுள்ளவைகளை ஆதி முதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறேன்; என் ஆலோசனை நிலைநிற்கும், எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வேன்'...(ஏசாயா 46:10)                                          உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காகச் சொன்ன நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை என்பதை உங்கள் முழு இருதயத்தாலும் உங்கள் முழு ஆத்துமாவாலும் அறிந்திருக்கிறீர்கள்; அவைகளெல்லாம் உங்களுக்கு நிறைவேறிற்று, அவைகளில் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை.(யோசு 23:14)

பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளுடைய தீர்க்கதரிசனங்களின்            ( https://www.scribd.com/document/373341838/351-Old-Testament-Prophecies-Fulfilled-in-Jesus-Christ1) நிறைவாய் வந்த இயேசு, தான் அந்த தீர்க்கதரிசனங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதையும், அது பிதாவின் சித்தம் என்பதையும் தன் மூலமாகவே மனுக்குலம் தேவனோடு மீண்டும் ஒப்புறவாகி நித்திய ஜீவனை பெற முடியும் என்பதையும் அறிந்திருந்தார். ஆனால் தேவ சித்தத்திற்கு எதிராகவும், 'ஆபிரகாமின் சந்ததி' என்றும் 'மோசேயின் வழிவந்தவர்கள் நாங்கள்' என்றும் கூறி இஸ்ரவேலர்கள் மீது அதிகாரத்தை செலுத்திவந்த பரிசேயர்களே சாத்தானின் பிள்ளைகள் என்பதை அறிந்திருந்தவராக 'விரியன் பாம்புக் குட்டிகள்' என்று அவர்களை அடையாளம் காட்டினார். (மத் 3:7,  12:34).

1. எரேமியா தீர்க்கதரிசியின் தீர்க்க தரிசன புத்தகத்தில் 31:27ல் 'இதோ வரும் நாட்களில், இஸ்ரவேல் வீட்டாரையும் யூதா வீட்டாரையும் இரண்டு விதமான வித்துக்களினால் (மனுசன்,மிருகம்) விதைப்பேன் என்று தேவன் வாக்களித்தார்.

அதை இயேசு கிறிஸ்து (மத் 13: 24 - 30 ல் நிறைவேற்றினார். மனிதர்களுக்கான தேவனின் வித்தாக வார்த்தையை,(லூக் 8:11, யோவா 3:32,34)'வார்த்தையே மனு உருவான' இயேசு விதைத்தார்.

வலுசர்பமான சாத்தானின் மிருக வித்தை (யோவா 8:44) பரிசேயர், சதுசேயர், வேதபாரகர், எஸ்ஸீனியர், ஸெலோத்தியர் முதலான ஐந்து குழுக்கள் தங்கள் சிந்தனையில் உதித்த வார்த்தைகளையும் மனித கர்பனைகளையும் விதைத்தார்கள் (மத் 13:28, 39).

2. எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகத்தில் 3:3 ல் தேவனிடமிடமிருந்து பெற்ற ஏட்டுச்சுருளை பெற்று புசித்த 'மனுப்புத்திரன்' எசேக்கியேலைப் போல 'மனுசகுமாரன்' என அழைக்கப்பட்ட இயேசு 'புதிய ஏற்பாட்டின் எசேக்கியேலான' அவர் தேவனுடைய வார்த்தையை தேவனிடமிருந்து பெற்று போதித்தார். (யோவா15:15). 

வெளி 5 இல் யோவானுக்கு தரிசனத்தில் மட்டுமே காட்டப்பட்ட, ஏழு முத்திரைகள் இடப்பட்டு பூமியில் எவருக்கும் மறைவாக, தேவனின் வலக்கரத்தில் இருந்த புத்தகம், பலியாக்கப்பட்ட செம்மறியான இயேசுவால் 6 முதல் 9 வரை திறக்கப்பட்டது. அது  வெளி 10:10 ல் வானதூதர் மூலம் புதிய யோவானுக்கு தான் உண்மையிலேயே கொடுக்கப்பட்டது. அவருக்கே அது முழுமையாக வெளிப்படுத்தப் பட்டு உலக கிறிஸ்துவ சபைகளுக்கு அறிவிக்க வேண்டும் என்று இயேசுவினால் கட்டளையிடப்பட்டதால் அதனை தனது 93 வயதிலும் உண்மையாக அவர் செய்து வருகிறார்.

3. ஏசாயா 29:8-13ல் தரிசனங்களெல்லாம் உங்களுக்கு 'முத்திரிக்கப்பட்ட புத்தகத்தின் வசனங்களைப்போல' இருக்கும் என்று தீர்க்க தரிசனம் கூறியுள்ளது போல, 2000 ஆண்டுகளாய் தேவனுடைய வலது கரத்தில் ஏழு முத்திரைகளால் முத்திரையிடப்பட்ட  ஏட்டுச்சுருளாய் (வெளி 5:1) செம்மறியாவர் அதன் முத்திரைகளை ஒவ்வொன்றாக உடைக்கும் வரை வானத்திலும் பூமியிலும் எவராலும் அறியப்படாமல் இருக்க, தேவன் அதனை வெளிப்படுத்தாதிருக்க, மனிதர்கள் தங்கள் சுயசிந்தனைகள் மூலம் அவர்கள் மனம்போல வியாக்கியானம் செய்ய முனைந்தால் உருவானவைகளே; கிறிஸ்தவத்தில் இன்றுள்ள எண்ணிக்கைக்கு அடங்காத பிரிவினைகள், சபைப் பாகுபாடுகள்,விதவிதமான வேதாகமக் கல்லூரிகள், வேதாகமவிளக்கவுரை புத்தக வியாபாரங்கள்.

 இந்த சபைகளில் 'தேவனுடைய வார்த்தை' என்ற பெயரில் தேவனால் ஆதாமுக்கு விலக்கப்பட்ட 'நன்மை தீமை அறியும் மரத்தின் கனியான' (ஆதி2:17) சாத்தானின் பொய்களும், மனித கற்பனைகளும் சேர்த்து ஆன்மீக உணவாக பரிமாறப்படுகிறது.

இவைகள் ஏவாளின் பார்வையில் ஆதி 3:6 ல் கூறபட்டுள்ளதுபோல் 'புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் வெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமாய் இருக்கிறது என்று கண்டு' துணிந்து சாத்தானுடைய வார்த்தைக்கு கீழ்படிந்து தேவனுக்கு எதிராக பாவம் செய்தாள், முதன்முதலில் தேவன் தெரிந்து கொண்டு வார்த்தையை கொடுத்த ஆதாமையும் பாவம் செய்ய வைத்தாள்.

 இங்கே சாத்தானின் தந்திரங்களான கண்களின் இச்சை, மாம்சத்தின் இச்சை ஜீவனத்தின் பெருமை மூன்றும் பயன்படுத்தப்படுவதுபோல் இன்றும் சபைகளில் கவர்ச்சியான ஆராதனைகளும் ஆசீர்வாதங்களும், மனதை மயக்கும் இசையும் அலங்காரங்களும், ஆறுதலான வெற்று வார்த்தைகளும் மனித தீர்க்கதரிசனங்களும் சாத்தானுடைய ஆவினால் ஏவப்பட்டு பயன்படுத்தப்படும் பாதிரியார்கள், பாஸ்டர்கள் , ஐயர்கள் என்றழைக்கப்படும் தேவ ஊழியர்களால், பயன்படுத்தப்பட்டு மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்.

மத்தேயு 23:13 ன்படி மாயக்காரரான பரிசேயரைப்போல, இன்று தேவ ஊழியர்கள் என்று சொல்லிக்கொள்கிற இவர்கள் தங்கள் சபையில் கூட்டம் குறைந்துவிடும் என்கிற பயத்தால் மக்கள் உண்மையை அறிய விடாமல் தடுத்து 'மனுஷர் பிரவேசியாதபடி பரலோகராஜ்யத்தைப் பூட்டிப்போடுகிறார்கள்;  அவர்களும் அதில் பிரவேசிக்கிறதுமில்லை, பிரவேசிக்கப்போகிறவர்களைப் பிரவேசிக்கவிடுகிறதுமில்லை.

யோவான் 3:3 ன்படி நாம் 'வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையினால்' மீண்டும் பிறக்க வேண்டும் 'ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான்' வசனம் 5ன் படி 'ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்திலே பிரவேசிக்கமாட்டான்'. இங்கே 'ஜலம்' என்று குறிப்பிடப்படுவது 'வார்த்தை' (உபா 32:1-2),(ஏசா 55:1-3) ஆனால் இவர்கள் அது 'ஞானஸ்நானத்தை' குறிப்பதாக கூறி யோவான் ஸ்நானகன் இஸ்ரவேலரை ஏமாற்றியதைப்போல் ஏமாற்றுகிறார்கள்.

 அவர் உண்மையான கிறிஸ்துவை, ஞானஸ்நானத்தின்போது புறாவைப்போல் ஆவியானவர் அவர்மீது இறங்கி வந்து தங்கியதைப் பார்த்து (யோ1:33) முதலில் ’இவரே தேவ குமாரன்’ என்று சாட்சி கொடுத்தாலும், இயேசு தாமே ஞானஸ்நானங்கொடுக்காத போதும் (யோவா 4:3) அவரோடு சேராமல் தனியாக தொடர்ந்து  ஞானஸ்நானம் கொடுத்து வந்தது (யோவா 3:23) ஏன்?

(மல் 4:1-5)ன் இயேசுவின் முதலாம் வருகையைப் பற்றிய தீர்க்க தரிசனத்தில், எலியாவின் ஆவியைக் கொண்ட யோவான் ஸ்நானகன் பற்றி கூறுகிறது. அதையே இயேசு மத் 17:10-13ல் வெளிப்படுத்தியிருக்க.பரிசேயர்கள் யோவான் ஸ்நானகனிடம் நீர் எலியாவா? (யோவா 1:21) என்று வினவியபோது தன் அழைப்பை (லூக் 1:17) அறிந்திருந்தாலும் ' நான் அவனல்ல' என்று கூறி குழப்பியது ஏன்?

தனக்கு தேவையில்லாத  ஏரோதியாள் காரியத்தில் தலையிட்டு, (நீதி 26:17) சிறையிலிருந்ததால் இயேசுவை 'வருகிறவர் நீர்தானா? (லூக் 7:19) என்று வினவி நம்பிக்கை இல்லாமல் நாணலைப்போலாகி சந்தேகப்பட்டது ஏன்?

மத் 9:14ல் யோவானுடைய சீஷர் அவரிடத்தில் வந்து: நாங்களும் பரிசேயரும் அநேகந்தரம் உபவாசிக்கிறோமே; உம்முடைய சீஷர் உபவாசியாமல் இருக்கிறதென்ன? என்று இயேசுவைக் கேட்டு, பரிசேயரோடு தங்களையும் இணைத்துக் கொண்டார்களே அது ஏன்?

இதுதாங்க விசுவாச துரோகம்! 

அவர் பேரொளியான இயேசுவுக்குமுன் அவருக்கு வழியை ஆயத்தம் செய்யவந்த, (பழைய ஏற்பாட்டு சாட்சிக் கூடாரத்தின், ஏழு பொன் குத்து விளக்கு). ஒளியான இயேசு (பகல், சூரியன்) வரும்வரை மட்டுமே.(யோவா 5:35). 

'விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் (உதாரணம் யூதாஸ் ஸ்காரியோத்து) வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது' (2தெச 2:3) என்று பவுல் வெளிப்படுத்துகிறார்.

நாம் வாழும் இந்த கடைசிக்காலத்தில் விசுவாச துரோகம் யாரால்? எப்பொழுது? எப்படி? எந்த இடத்தில் நிகழ்ந்தது? என்று இயேசுவால் வெளிப்படுத்தப்பட்டவர் தான் இயேசுவின் தூதன்!

யோசிக்க! 'ஜலம்'என்பது தேவ வார்த்தைதான் என்பதை நீங்களே வேதத்தில் ஆராய்ந்து பாருங்கள். (வெளி 22:17) 'தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்'. மேலும் ஆமோ 8:11-12, ஏசா 1:22, 5:1-7, 55:1-3, உபா 32:2, எரே 23:15-16, மத் 24:7, யோவா 3:5,15:3, 1கொரி 3:6-9, 1பேது 1:22,3:21, வெளி 8:10-11,22:1-2,14,17.

இப்படி வேதத்தில் நீங்கள் வாசிக்கும் ஒவ்வொரு வார்த்தைக்கான பொருள் வேதத்தில் மறைபொருளாக மறைந்திருக்கிறது. அவைகளை நான் பட்டியலிடுகிறேன்.விதை, நிலம், பறவை,உணவு, புளிதமாவு, பாத்திரம்,தராசு,இருப்புக்கோல் (தடி), நெருப்பு, தூபகலசம், பானை, வெளிச்சம், குத்துவிளக்கு, குருடன், செவிடன், திருமண உடை, பொக்கிஷம்,செல்வந்தர், நீர், நீரூற்று, ஆறு, கடல், மீனவர், வலை, மீன், கப்பல், மிருகம், தலை, கொம்பு, வால், செம்மறியானவரின் உடல்,மற்றும் இரத்தம், புதிய மற்றும் பழைய திராட்ச்சை ரசம், புதிய மற்றும் பழைய சித்தை (துருத்தி), ஒலிவ எண்ணை,மலை, முத்திரை, எக்காளம், பாடல், கல், உருவம், நான்கு உருவங்கள் (சிங்கம், கழுகு, காளை, மனிதன்), காற்று, இறப்பு, கல்லறை, உயிர் மூச்சு, உயிர் பெறல், மணமகன்,மணமகள், விதவை, பெற்றோரில்லாத பிள்ளை, போர், எருசலேம், பாபிலோன், வானம், பூமி, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், சாவி இவையெல்லாம் உவமைகளாக வேதத்தில் கையாளப்பட்டுள்ளன.

 இவைகளுக்கு சரியான அர்த்தத்தை தேவனே வெளிப்படுத்தாமல், எத்தனை முறை நாம் வேதத்தை வாசித்தாலும் நம்மால் அதை முழுமையாக அறிய முடியாது.

 இயேசுவின் சீஷர்கள் அவரிடத்தில் வந்து: ஏன் அவர்களோடே உவமைகளாகப் பேசுகிறீர் என்று கேட்டார்கள். (மத் 13:10) அதற்கு இயேசு v11 ல்' 'பரலோகராஜ்யத்தின் இரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது, அவர்களுக்கோ அருளப்படவில்லை' என்று கூறினார். இதுதான் இரகசியம். இதனை இயேசு வெளிப்படுத்தி அனுப்பியதால் இப்பொழுது அதை வெப்படுத்திக் கொண்டிருப்பவர் தான் அவர் அனுப்பிய தூதன்!

4. ஓசியா தீர்க்கதரிசன புத்தகத்தில் 4:6 உரைத்து போல 'என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள்'. மேலும் 8:12 ல் உரைத்து போல 'வேதத்தின் மகத்துவத்தை அந்நியகாரியமாக எண்ணினார்கள்'.

 நாம் தேவனுடைய வேதத்தை (வார்த்தையை) நமக்கேற்ற வகையில் மாற்ற (லூக் 16:17) நமக்கு அதிகாரமில்லை. நம் சுயபுத்தியின்மேல் சாயாமல்,வேதத்தை முழுமையாகப் படித்து, பழைய ஏற்பாட்டில் நமக்கு எச்சரிக்கையாக வைக்கப்பட்டுள்ள பாத்திரங்களிடமிருந்து நாம் பாடம் கற்க வேண்டும். அவர்கள் மீண்டும் மீண்டும் கடவுளின் உடன்படிக்கையை மீறி பாவம் செய்து சாபத்தை பெற்றதுபோல் நாம் அவரின் உடன்படிக்கையை மீறாமல் காத்து அவருடைய புதிய கட்டளைக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்.

☝புதிய ஏற்பாட்டிலும் குறிப்பாக வெளிப்பாடு நூலிலும் நம் இரட்சகர் இயேசுகிறிஸ்து பல தீர்க்கதரிசன வாக்குறுதிகளை கொடுத்து சென்றுள்ளார். அவைகளை நாம் அறிந்து கொண்டால் மட்டுமே அவை நிறைவேறும் காலத்தில் அதனை கண்டு நாம் அதனை விசுவாசிக்க முடியும் (யோவா 13:19,14:29,16:4).

💥கடைசி இரா போசனத்தின் போது தம் சீடரிடம் விடைபெறும் நேரத்தில் அவர் உதிர்த்த சொற்கள் ஒவ்வொன்றும், அதிகாரங்கள் 14 முதல் 16 வரை அனைத்தும் இயேசு நமக்காக தந்த தீர்க்க தரிசன வாக்குறுதிகள். அவைகள் அனைத்தும் நாம் வாழும் இந்த காலகட்டத்தில் நிறைவேறிக் கொண்டு இருக்கின்றன.

அவைகளில் சில உங்கள் பார்வைக்கு,

 1. (லூக் 18:8)

'மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார்.' 💔

1966ல் ஆவியானவர் ஏழு பேரை நூரு நாட்கள் ஒரு மலையில் கொண்டு சென்று மேலே குறிப்பிட்ட உவமைகளாக பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகளுடைய கருத்துக்களை போத்தித்தார். அவர்கள் ஏழு நட்சத்திரங்களாக இயேசுவின் கரத்தில் செயல்பட்டு ஏராளமான மக்களை ஈர்த்தார்கள், தங்கள் இரத்தால் எழுதி உடன்படிக்கை செய்தும் இறுதிவரை அதில் நிலைநிற்காமல் விழுந்தார்கள்.

இதுவே நம் காலத்தின் விசுவாச துரோகம். தாங்கள் துரோகம் செய்து விழுந்துபோன 'ஏழு பொன் குத்து விளக்கின் மறைபொருளாய் இருப்பது'  அவர்களுக்கே தெரியாத நிலையில் அதை இயேசு இந்த தூதருக்கு வெளிப்படுத்தியுள்ளார்.

2. (லூக் 12:42)

'பணிவிடைக்காரருக்குத் தகுதியான காலத்திலே படி (உணவு) கொடுக்கும்படி எஜமான் அவர்கள்மேல் அதிகாரியாக வைக்கத்தக்க  உண்மையும் விவேகமுமுள்ள விசாரணைக்காரன் தான் இயேசு அனுப்பிய இந்த தூதன். 

3. (யோவா 13:20)

'நான் அனுப்புகிறவனை (தூதன்) ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்.

4. (யோவா 14:2,3)

'ஒரு ஸ்தலத்தை (வெளி 21ல் இப்பூமியில் இறங்கிவரப்போகும் அப்போஸ்தலர்களை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்ட 'விண்ணக எருசலேம்') உஙக்களுக்கு ஏற்பாடு செய்யப்போகிறேன்.

5. (யோவா 14:16)

அவர் தேற்றரவாளன், சதியாக ஆவி, நம்மோடு வாழ்பவர், v 23. நாங்கள் (இயேசுவும்,கடவுளும்) அவனிடத்தில் வாசம் செய்வோம், v26.போதித்து நினைப்பூட்டி சாட்சிகொடுப்பார். 

6. (யோவா16:8,13-15)

'அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்'.

7. (யோவா 16:25)

அவர் உவமைகளாய் பேசாமல் வெளிப்படையாக அறிவிப்பார்.

8. (வெளி:3:12)

'ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன், அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை; என் தேவனுடைய நாமத்தையும் என் தேவனால் பரலோகத்திலிருந்து இறங்கிவருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதிய நாமத்தையும் அவன்மேல் எழுதுவேன்.'

ஜெயங்கொண்டவர் தான் இந்த தூதன். அவர் யாரை? எங்கு? எப்போது? எதைக் கொண்டு வெற்றி கொண்டார்? என்பதை அவரிடமே கேட்டு அறிந்து கொள்ள வேண்டும்.

9. (வெளி 22:8,16)

'சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன்.

அந்த தூதனின் மூலமாகவே அனைத்தும் வெளிப்படுத்தப்படும், அவர் மூலமாகவே இப்பொழுது இயேசுவின் இராஜ்ஜியம் இவ்வுலகில் 1984.03.14 முதல் அப்போஸ்தலர்கள் பன்னிருவரின் பெயர்களில் உருவாக்கப்பட்ட பன்னிரு கோத்திரங்களாக உருவாகி கட்டப்பட்டுக்கொண்டு வருகிறது.

முதலில் நாம் அந்த வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையை அவரிடம் பெற்று அதனால் மீண்டும் பிறக்க வேண்டும்.(லூக் 13:19),(மத் 13:3)

மனித சிந்தனைகளின் மூலம் இதுவரை நம் இதையத்தில் விதைக்கப்பட்ட சாத்தானின் வார்த்தைகளை, களைகளை நம் இருதயத்திலிருந்து பிடுங்கி அகற்ற வேண்டும் (எரே 1:10, 31:28).

 அதற்கு, இயேசு விதை விதைத்த இந்த உலக நிலத்திலிருந்து தேவ தூதர்களால் நல்ல விதையுடைய கதிர்களாக நாம் அறுவடை செய்யப்பட வேண்டும். (மத் 13 : 39,41)

 அதற்குமுன் தேவ வார்த்தை இல்லாத பதர்கள், களைகள் கயிறுகளால்  ( இனிப்பு, விஷ எச்சரிப்பு, ஆசீர்வாத வார்த்தைகளால்) கட்டுகளாகக் கட்டப்பட்டு தீயிளிடப்பட்டு எரிக்கப்பட அந்த நிலத்திலே விடப்படுவர். (மத் 13 : 30)

 தேவனின் அழிவில்லாத, வெளிப்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகளை பெற்றுக்கொண்ட நாம் அதினால் இருதயத்தில் முத்திரையிடப்பட வேண்டும். இயேசு உருவக்கியுள்ள (12 வழிகள்) பன்னிரு கோத்திரங்களில் ஒருவராக (தூதரின் சபைப்பதிவேடு) ஜீவபுஸ்தகத்தில் உங்கள் பெயரும் எழுதப்பட வேண்டும்.

 வெளிப்படுத்தப்பட்ட வெளிப்பாடு நூலை (வெளி 22:18-19)ல் உள்ள புதிய உடன்படிக்கையின்படி அதிலிருந்து ஒரு வார்த்தையும் கூட்டவோ குறைக்காமலோ  அதனை அவை நிறைவேறியபோது (இயேசு முத்திரைகளை உடைத்தபோது) வெளிப்படுத்தப்பட்ட மனிதர்கள் யாவர்? எங்கு? எப்படி? யார் முன்னிலையில்? எப்போது நிறைவேறியது? என்பதை அந்த தூதர் மூலமாக கேட்டறிந்து விசுவாசிக்க வேண்டும்.

 அப்போதுதான் விசுவாச துரோகத்திற்கு பின், வெளிப்ப்ட்ட கேட்டின் மகன் யார்? எப்போது? எப்படி வெளிப்படான்? அவனை எப்போது? யார்? எதனைக்கொண்டு? எப்படி? ஜெயங்கொண்டார்?

என்பதை நாம் அறிந்துகொண்டால் தான், நாமும் யாரை? எப்படி? ஜெயங்கொண்டு இயேசு நமக்காக வைத்துள்ள (வெளி 2,3) அதிகாரங்களில் எழுதப்பட்டுள்ள பன்னிரு ஆசீர்வாதங்களை [1. தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியை உண்பது (வெளி 2:7)2ஜீவகிரீடம் (வெளி 2:10), 3.இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை (வெளி 2:11), 4. மறைவான மன்னா (வெளி 2:17), 5. வெண்மையான குறிக்கல் (வெளி 2:17), 6. அந்தக் கல்லின்மேல் எழுதப்பட்டதும் அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக்கூடாததுமாகிய புதிய நாமம் பெறுதல் (வெளி 2:17) 7இரும்புக்கோலால் ஆளுதல் (வெளி 2:27), 8விடிவெள்ளி நட்சத்திரம் (வெளி 2:28), 9வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படுதல் (வெளி3:5), 10 ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடாமல் இருத்தல் (வெளி3:5), 11தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குதல், தேவனுடைய நாமத்தையும் தேவனால் பரலோகத்தில் இருந்திறங்கிவருகிற புதிய எருசலேமாகிய தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், இயேசுவின் புதிய நாமத்தையும் அவன்மேல் எழுதுதல் (வெளி 3:12), 12இயேசுவினுடைய சிங்காசனத்தில்  இயேசுவோடேகூட உட்காரும்படியன அதிகாரம்] நாமும் பெற்றுக்கொள்வோம்.

 இயேசுவின் பிள்ளைகளாக அவருடைய இராஜ்ஜியத்தில் பங்குபெற்று இதே உலகத்தில் இயேசுவின் அரசாட்சியில் அவரோடு ஆயிரம் ஆண்டுகாலம் அரசாள்வோம். மரித்த அனைவரையும் நியாந்தீர்ப்போம்.

  அதற்கு முன்பாக, வெளிப்படுத்தல் புத்தகத்தில் எத்தனை அதிகாரங்கள் நிறைவேறி விட்டது? என்பது உங்களுக்கு தெரியுமா? (அதற்கான பதில், 17 அதிகாரங்கள் நிறைவேறி, 18 ன் நிறைவை நாம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்).

  ஏன் அது நிறைவேற தேவன் காலம் தாழ்த்துகிறார் தெரியுமா? [வெளி 18:4 ன்படி இன்னும் தேவ இராஜ்ஜியத்துக்குரிய தேவ பிள்ளைகள் பாபிலோனிய சபைகளிலில் சிக்குண்டிருக்கிற தேவபிள்ளைகள் அங்கிருந்து வெளியேறி அவளுடைய (பாபிலோன் சபை) பாவ சாபங்களில் பங்கு பெறாமல் தப்பிக்கவே]. உங்க்ளையும் அழைக்கிறார்.

இன்னும் 19ம் அதிகாரத்தில் எவ்வாறு இரத்த சாட்சிகளின் ஆவிகளோடு நாம் எப்போது? திருமண உறவில் பினைக்கப்பட்டு மருரூபமாக்கப்பட்டு (1கொரி 15:51) இயேசுவின் திருமண விருந்தில் 'கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் நாம் எவ்வாறு கூட்டிச் சேர்க்கப்படுவோம்? (லூக் 13: 29) அங்கு நமக்கு சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம் தரித்துக்கொகொள்ளும்படி அளிக்கப்பட்டு ( வெளி 19: 8) யாருடைய 'உடல்கள்' (ஆவிக்குரிய) விருந்தாக்கப்படும்? ( வெளி 19: 18) சாத்தான் சிறிது காலம் சிறைபடுவான்.

பின்பு அதிகாரம் 20ல் ஆயிரம் ஆண்டுகள் முடிந்து சாத்தான் 'கோகையும் மாகோகயும்' கூட்டிக்கொண்டு அர்மகெதோனில் போர்புரிந்து எப்படி மீண்டும் இறுதியாக தோல்வியுற்று தண்டனையடைவான்? (வெளி 20: 8) கோகு மாகோகு யார்? 

21ம் அதிகாரத்தில் விண்ணக எருசலேம் எங்கு? எப்படி  இறங்கிவரும்? கண்டிப்பாக நீங்கள் எதிர்பார்க்கும் பழைய எருசலேம் அல்ல! அந்த இஸ்ரவேலர் எப்போதோ தள்ளப்பட்டு விட்டார்கள் (மத் 8:12). (வெளி 6 ல் இருளடைந்த சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் அவர்களே) . 

யோவான் ஸ்நானகன் அதற்கு உதாரணம்.(மத் 11:11)ன் பின்பகுதியில் "... ஆகிலும், பரலோகராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறானென்று உங்களுக்கு மெய்யாகவே சொல்லுகிறேன். மேலும் 21ம் அதிகாரத்தில் நம் தேவனோடு நாம் வாழும் பேரின்ப வாழ்வு விளக்கப்பட்டுள்ளது.

அதிகாரம் 22:18-19 ல் தான் முக்கியமான புதிய உடன்படிக்கையின் கட்டளை உள்ளது. யார் யார் இராஜ்ஜியத்தில் பங்கடைவர்? யார் அதில் பங்கடைய மாட்டார்கள்? என்பது தெளிவாக வரையறுத்து எழுதப்பட்டுள்ளது. 

நீங்கள் எங்கே?  வேதத்தில் நீங்கள் யார்?

ஏற்கெனவே நான் இரட்சிக்கப்பட்டு விட்டேன் என்பது சாத்தான் கூறி உங்களை நம்ப வைத்துள்ள மிகப்பெரிய பொய். இனிமேல் தான் அதிகாரம் 19 நிறைவேறும் போதுதான், இயேசு கிறிஸ்து தன் இரத்தத்தால் சம்பாதித்து நமக்களித்த விலைமதிப்பு  இல்லாத பாவமன்னிப்பை  அப்போதுதான் நாம் பெற்றுக்கொள்வோம்.(வெளி 5:9, 7:14) ஏமார்ந்து விடாதீர்கள்! விளைவு நித்தியமானது!! பரலோகம் அல்லது நரகம். நித்திய வாழ்வு அல்லது நித்திய தண்டனை. 1கொரி 15:51 ன் படி ஏழாம் எக்காத்தின் ஒலி இது. விழித்துக் கொள்வோம். ஆமென்.